For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவ்வளவு பிரஷரில் என்ன அடி.. செல்லத்தை தூக்கிட்டு வாங்க.. இவர்தாங்க இந்தியா தேடும் அந்த ஆல்ரவுண்டர்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: நியூஸிலாந்துக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்திய அணி தேடிக்கொண்டு இருக்கும் அந்த பவுலிங் ஆல் ரவுண்டரை கண்டுபிடித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிராக 3வது டி 20 போட்டியில் இந்திய அணி விறுவிறுப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறது. இரண்டு டி 20 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி வென்றுவிட்டது.

போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா ஆச்சர்யமாக பவுலிங் எடுப்பதற்கு பதில் பேட்டிங் எடுத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி பவர் பிளேவில் அடித்து வெளுத்தது.

ரோஹித்

ரோஹித்

ரோஹித் தொடக்கத்திலேயே அதிரடி காட்டி முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி அடித்தார். அதன்பின் வேகம் எடுத்த இந்திய அணி 6 ஓவரில் 69 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 20 ஓவருக்கு 200 ரன்கள் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6.2 ஓவரில் இஷான் கிஷான் 29 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.

திணறல்

திணறல்

இதன் பின்தான் இந்திய அணி லேசாக திணற தொடங்கியது. சூர்ய குமார் யாதவ் இறங்கி தேவையில்லாத ஷாட் அடித்து டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து இறங்கிய பண்டும் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால் அதுவரை டிரைவர் சீட்டில் இருந்த இந்தியா பின்னடைவை சந்தித்தது.

வேகம்

வேகம்

பின்னர் வேகம் எடுத்த ரோஹித் சர்மாவும் 11.2 ஓவரில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி என்று 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் இந்திய அணி மிடில் ஆர்டர் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் இரண்டு பேரும் முந்தைய போட்டிகளை விட இன்று நன்றாக ஆடினாலும் அவ்வளவு சிறப்பான ஆட்டம் ஆடவில்லை.

அவுட்

அவுட்

வெங்கடேஷ் ஐயர் 15 பந்தில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் 20 பந்தில் 2 பவுண்டரி என்று 25 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் வெங்கடேஷ் ஐயர் பவுலிங் பேட்டிங் ஆல் ரவுண்டராக எடுக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு முதல் 2 போட்டிகளில் பவுலிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பேட்டிங்கிலும் வெங்கடேஷ் ஐயர் சரியாக ஆடவில்லை. அவரின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

பாஸ்ட்

பாஸ்ட்

இன்றுதான் முதல் முதலாக வருக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. இன்னொரு பக்கம் பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் பல மாதமாக பவுலிங் போடாத காரணத்தால் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட பல பேரிடம் இந்திய அணி பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டரை தேடிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் தீபக் சாகர் இன்று மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இன்று கடைசி நேரத்தில் மிகவும் பிரஷரான நேரத்தில் சாகர் களமிறங்கி அதிரடி காட்டினார்.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

வெறும் 8 பந்துகள் மட்டுமே பிடித்த சாகர் கடைசி நேர பிரஷரில் 21 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸ், 2 பவுண்டரி அடக்கம். கடைசி நேரத்தில் இந்திய அணியின் ஸ்கோர் 184 எடுக்க இவரின் அதிரடிதான் காரணம். இதற்கு முன்பே இலங்கைக்கு எதிராக 50 ஓவர் தொடரின் 2வது போட்டியில் சாகர் கஷ்டமான கட்டத்தில் 82 பந்தில் 69 ரன்கள் எடுத்தார்.

அதிரடி

அதிரடி

அந்த போட்டியில் அதிரடி 7 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்து ஆட்டத்தை பினிஷ் செய்தது தீபக் சாகர்தான். இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு வெற்றிபெற வைத்தார். அதோடு சிஎஸ்கே அணியிலும் இவர் நன்றாக பேட்டிங் பவுலிங் செய்துள்ளார். 2018ல் இவர் டாப் ஆர்டரில் கூட ஒரு போட்டியில் சிஎஸ்கேவிற்காக இறங்கினார் என்பது கூட குறிப்பிடத்தக்கது. தன்னை பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் என்று பல போட்டியில் நிரூபித்துள்ளார்.

 பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்

பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்

இந்தியா பலரிடம் பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டரை தேடிக்கொண்டு இருக்கும் போது அது தான்தான் என்று தீபக் சாகர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். இவருக்கு மட்டும் டிராவிட்டும் - ரோஹித்தும் தொடர்ந்து வாய்ப்பு அளித்து பயிற்சி கொடுத்து கொஞ்சம் டாப் ஆர்டரில் இறக்கினால் பெரிய பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக உருவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

English summary
Ind vs NZ series: Deepak Chahar proved he is the bowling all-rounder India searching for all these days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X