For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று இரவு நடந்த சம்பவம்.. 1 மாதமாக கச்சிதமான பிளான் போட்ட இந்தியா.. சீனாவிற்கு ஷாக் தந்தது எப்படி?

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் இருக்கும் முக்கியமான மலைப்பகுதியை இந்தியா ஆக்கிரமித்தது எப்படி என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியா சுமார் ஒரு மாதமாக திட்டமிட்டு அங்கு இருக்கும் மலைகளை ஆக்கிரமித்து உள்ளது.

லடாக்கில் தற்போது இந்தியா முக்கியமான மலைப்பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. சீனா கடந்த ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் லடாக்கில் அத்துமீற முயன்றது.

ஆனால் சீனாவின் முயற்சியை முன்பே தெரிந்து கொண்டு லடாக்கில் இந்தியா படைகளை குவித்து, சீனா ஆக்கிரமிக்க நினைத்த இடங்களை இந்தியா கைபற்றியது. ஆகஸ்ட் 29 மற்றும் 30 இரவுகளில் நடந்த இந்த சம்பவம் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

துப்பாக்கி சுடும் தூரத்தில் வீரர்கள்.. சக்தி வாய்ந்த துப்பாக்கி சுடும் தூரத்தில் வீரர்கள்.. சக்தி வாய்ந்த "Militia Squad" படையை இறக்கிய சீனா.. போர் மேகம்

எங்கே

எங்கே

முக்கியமான பாங்காங் திசோவின் தெற்கு பகுதியை இந்தியா கைப்பற்றியது. அங்கு இருக்கும் 4 மலைப்பகுதியை இந்தியா தன் வசம் கொண்டு வந்தது. முக்கியமான இரண்டு மலை பகுதிகளாக கருதப்படும் ரெசின் லா, ரெஸ்லாங் லா ஆகிய பகுதிகளை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனால் எல்லையில் இந்தியா தற்போது அதிக பலம் பெற்றுள்ளது. இதனால் எல்லையில் போர் வந்தால் இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

லடாக்கில் பாங்காங் திசோவின் வடக்கு பகுதியை சீனாவிடம் இந்தியா இழந்த பின்பே இந்தியா இந்த திட்டத்தை வகுத்து உள்ளது. சீனா கண்டிப்பாக தெற்கு பகுதியை ஆக்கிரமிக்க வரும் என்பதை தெரிந்து கொண்டு இந்திய அங்கு படைகளை அனுப்பி உள்ளது. எல்லையில் உளவு தகவல் காரணமாக இந்தியா சீனாவிற்கு இந்த ஷாக்கிங் சர்ப்ரைஸை கொடுத்துள்ளது. அங்கு இருக்கும் பெரும்பாலான மலைகள் இப்போது நம் வசம் உள்ளது. இதற்காக இந்தியா ஒரு மாதம் பிளான் போட்டுள்ளது.

ஒரு மாதம் பிளான்

ஒரு மாதம் பிளான்

அதன்படி எந்த இடத்தை பிடிக்கலாம், எப்படி பிடிக்கலாம், எப்போது பிடிக்கலாம் என்ற பிளானை இந்தியா மிகவும் கவனமாக போட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன், அதாவது ஜூலை இறுதியில் இதற்காக நான்கிற்கும் அதிகமான பிளான் போட்டுள்ளனர். அதில் ஒரு பிளானை இறுதி செய்துள்ளனர். இதற்கு மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 15க்கு பின் அனுமதி அளித்துள்ளது.

கிரீன் சிக்னல்

கிரீன் சிக்னல்

மத்திய அரசு, இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில்தான் ராணுவம் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி இரவு மலையை பிடித்துள்ளது. அதற்கு முன் செய்த பேச்சுவார்த்தை எதையும் சீனா மதிக்கவில்லை. சீனா கண்டிப்பாக இனி பேச்சுவார்த்தையை மீறி எல்லையில் அத்துமீற வாய்ப்புள்ளது. அதனால் சீனாவிற்கு முன்பாக எல்லையில் படைகளை குவிக்க வேண்டும் என்று இந்த பிளானை கையில் எடுத்துள்ளனர்.

செல்லாமல் இருந்தது

செல்லாமல் இருந்தது

அதிலும் சீனா லடாக்கில் ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா போஸ்ட் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்காமல் இருந்தது. இதன் காரணமாகவே இந்தியா எல்லையில் புதிய இடங்களை பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளது. இதனால்தான் முக்கியமான ஒரு பிளான் ''டிக்'' அடிக்கப்பட்டு, செயலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவ தரப்பு அளித்துள்ள தகவலில்.. இந்த திட்டத்தை நாங்கள் முன்பே போட்டுவிட்டோம்.

முன்பே திட்டம்

முன்பே திட்டம்

எப்போதும் எங்களிடம் நிறைய பிளான்கள் இருக்கும். கடைசி நேரத்தில் திட்டங்களை வகுக்க மாட்டோம். மலைகளை இரவோடு இரவாக பிடிக்கும் திட்டம் முன்பே ஒரு மாதம் முன் போடப்பட்டது. படிப்படியாக அனைத்து விஷயங்களை முறையாக வகுத்து இந்த திட்டத்தை போட்டோம். சிலருக்கு மட்டுமே இந்த திட்டம் குறித்து தெரியும். பேச்சுவார்த்தையின் போதே இன்னொரு பக்கம் படைகள் குவிப்பு குறித்து திட்டம் போட்டுவிட்டோம்.

எப்போது வேண்டும்

எப்போது வேண்டும்

அதை எப்போது அரங்கேற்ற வேண்டும் என்பதே கேள்வி. சரியாக உளவு தகவல் மூலம் சீனாவின் வருகையை கணித்து ஆகஸ்ட் 29ம் தேதி எல்லையில் எங்கள் பிளானை அரங்கேற்றினோம். இதற்கான திட்டங்களை உயர் அதிகாரிகள் வகுத்தனர். கிராபிக்ஸ் போர்ட் மூலம் வீரர்களுக்கு விளக்கப்பட்டது. சீனாவின் பலவீனம் என்ன. எப்படி சீனாவை விட வேகமாக மலையை பிடிக்கலாம்.

எல்லை எங்கே

எல்லை எங்கே

அங்கு எத்தனை வீரர்களை அனுப்ப வேண்டும் என்று திட்டங்களை வகுத்தோம். இதற்காக தனியாக மேப் ஒன்றை போட்டோம். இதற்காக சிறப்பான வீரர்களை தேர்வு செய்தோம். ஒரு மாதம் இதற்கு அவர்களை தயார் செய்தோம். இது எல்லாம் ரகசியமாக நடந்தது. சில ராணுவ வீரர்களுக்கு கூட இந்த தகவல் தெரியாது. வெளியே சொல்லாமல் மிக அமைதியாக செயல்பட்டோம்.

சில நிமிடம் முன்

சில நிமிடம் முன்

ஸ்பெஷல் பிரண்டியர் போர்ஸ், இந்தோ திபெத் போலீஸ், இந்திய ராணுவம் என்று எல்லா குழுவில் இருந்தும் வீரர்களை கொண்டு வந்து , தனி குழு உருவாக்கப்பட்டு அவர்களை எல்லைக்கு அனுப்பினோம். ஒரு மணி நேரம் முன்புதான் ஆபரேஷன் இன்று நடக்க போகிறது என்பதை வீரர்களுக்கு தெரிவித்தோம். இதனால் எளிமையாக லடாக்கில் மலைகளை கைப்பற்ற முடிந்தது. சீனாவிற்கு எங்களை திட்டம் கொஞ்சம் கூட கசியாமல் போனதற்கு இதுவே காரணம் ஆகும், என்று இந்திய ராணுவ தரப்பு கூறியுள்ளது.

English summary
India China Standoff: How India planned the operation mountain one month before the Late night surprise?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X