ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் வெற்றி! நாட்டின் 14-வது ஜனாதிபதியாகிறார்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் 66% வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள்ளார்.

குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

India's Next president is RamNath Govind

பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். இவர்களில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக, சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி, லோக் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் மீராகுமாருக்கு காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளு்ம ஆதரவு தெரிவித்தன.

ஜனாதிபதி தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளும், மீராகுமார் 3,67,314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 66 சதவீதமும், மீராகுமாரும் 34 சதவீதமும் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Presidential election: BJP candidate Ramnath Govind won the race.
Please Wait while comments are loading...