For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 3.5 கோடி செலவில் நாட்டிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி.. எங்கே தெரியுமா?

நாட்டிலேயே பஞ்சாபில் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: நாட்டிலேயே பஞ்சாபில் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. மூன்றரை கோடி ரூபாய் செலவில் 360 அடி உயர கொடிக்கம்பத்தில் இந்த தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி சர்வதேச எல்லைப்பகுதியில் இந்தியாவின் மிக உயரமான மூவர்ண கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. 360 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் இந்தியாவின் மிக பெரிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டுள்ளது.

India's tallest national flag unfurled at Attari border

இந்த தேசியக்கொடி 120 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்டது ஆகும். இந்த தேசியக்கொடி நேற்று முதல்முறையாக பறக்கவிடப்பட்டது. மத்திய அமைச்சர் அனில் ஜோஷி இதனை பறக்கவிட்டார்.

3.5 கோடி ரூபாய் செலவில் இந்த தேசியக்கொடி மற்றும் கொடிக்கம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. லாகூரின் அன்னார்கலி பசாரில் இருந்து பார்த்தால் கூட வானில் மூவர்ண கொடி பட்டொலி வீசி பறப்பதை காண முடியும் என தெரிவிக்கப்பட்டது.

English summary
Nation's biggest tricolor measuring 120 feet length 80 feet Breadth was unfurled Sunday at country's tallest 360 feet long flagpole at Attari international border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X