For Daily Alerts
ஈராக்கிலிருந்து 900 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: மத்திய அரசு தகவல்
டெல்லி: ஈராக்கில் இருந்து 900 இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சையத் அக்பருதீன் கூறியதாவது:
திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்திய நர்சுகள் 46 பேரை பாதுகாப்பு கருதியே மொசுல் நகருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். செவிலியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

ஈராக்கில் இருந்து 1500 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் 900 பேர் விரைவில் நாடு திரும்ப உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.