இன்று உலக தூக்க தினம் - இந்தியர்கள் எத்தனை மணிநேரம் உறங்குகிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு நாளில் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே இந்தியர்கள்தான் மிக குறைவாக உறங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலக தூக்க தினம் கடைபிடிக்கப்படும் இந்த நாளில் மனிதர்களின் உறக்கம் பற்றிய ஆய்வு ஒன்றினை அறிந்து கொள்வோம்.

தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. சிலருக்கு அதிகம் தூக்கம் வரும்... சிலருக்கு தூக்கமே வராது. இது இரண்டுமே நல்லதல்ல.
கடினமான உழைப்பு உழைத்துவிட்டு வந்தாலும் சிலருக்கு சாமான்யமாக தூக்கம் வராது.

நன்றாக குறட்டை விட்டு தூங்கினால் கும்பகர்ணன் என்பார்கள். தூக்கம் வராமல் விழித்திருந்தால் ராக்கோழி என்றும் பட்டப்பெயர் சூட்டுவார்கள். சரி இப்போது எந்த நாட்டில் வசிப்பவர்கள் எத்தனை மணிநேரம் உறங்குகிறார்கள் என்பது ஆய்வு நடத்தியுள்ளனர்.

ஹெல்த் பிட்னஸ் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் மொத்தம் 18 நாடுகளைச் சேர்ந்த மக்கள், மிகக் குறைவான நேரமே உறங்குவதாக, தெரியவந்துள்ளது.

தூக்கம் பற்றிய ஆய்வு

தூக்கம் பற்றிய ஆய்வு

அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களை விட ஆசிய நாட்டில் வசிப்பவர்கள் குறைவான நேரம் உறங்குவது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அதிகம் உறங்கும் அமெரிக்கவாசிகள்

அதிகம் உறங்கும் அமெரிக்கவாசிகள்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினரே, உலக அளவில், நீண்ட நேரம் அதாவது, 8 மணிநேரத்திற்கும் மேலாக, சராசரி உறக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டின் மக்கள் சராசரியாக, நாள்தோறும் 7 மணிநேரத்திற்கும் மேலாக உறங்குகின்றனர்.

இந்தியர்களுக்கு அக்கறையில்லை

இந்தியர்களுக்கு அக்கறையில்லை

இந்தியர்கள், நாள் ஒன்றுக்கு 6.55 மணிநேரம் மட்டுமே உறங்குவதாக, தெரியவந்துள்ளது. இந்தியர்களிடையே உடல்நலம் பராமரிப்பதில் போதிய அக்கறை இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், வேலைப்பளு, உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்டவை காரணமாக, அவர்கள் மிகக்குறைவான நேரமே உறங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான்வாசிகள்

ஜப்பான்வாசிகள்

அந்த 18 நாடுகளில், ஜப்பான் நாட்டு மக்களே முதலிடத்தில் உள்ளனர். ஜப்பானியர்கள், நாளொன்றுக்கு, சராசரியாக, 6.35 மணிநேரம் மட்டுமே உறங்குவதாக, ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தைவான், ஹாங்காங் நாட்டினரும் 7 மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்குகின்றனர்.

ராக்கோழி இளைஞர்கள்

ராக்கோழி இளைஞர்கள்

இன்றைக்கு அநேக இளைஞர்கள் அதிகம் உறங்குவதில்லை. செல்போன், வாட்ஸ்அப், கம்யூட்டர்களில் நீண்ட நேரம் செலவிடுகின்றனர். இது இந்திய இளைய தலைமுறையினரின் உடல்நலத்தை அதிகம் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. நல்ல உறக்கம் மட்டுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நன்றாக உறங்குவோம்

நன்றாக உறங்குவோம்

தூக்கம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. மனது அமைதியாக இல்லை என்றால் எத்தனை நேரம் ஆனாலும் தூக்கம் என்பது வராது. வழக்கமாக தூங்கி விழிக்கும் நேரங்களை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றாமல் இருப்பது நல்லது. படுக்கப்போகும் முன் மனக்கவலை, கோபம், துக்கம் முதலிய மனக்கிளர்ச்சி தரும் உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. உறங்கும் முன்பாக தியானம் செய்தாலும் நன்றாக உறக்கம் வரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உறக்கம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். அது நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள உதவும். இந்த உறக்க தினத்தில் இதை உணர்ந்து கொள்வோம் நன்றாக உறங்குவோம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indians are some of the poorest sleepers in the world, clocking in an average of 6.55 hours a night a study has revealed
Please Wait while comments are loading...