For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய, சீன எல்லையில் போர் பதற்றம்.. இரு நாடுகளின் படை பலம் என்ன தெரியுமா?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளும் ஆபத்து உருவாகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எந்த நேரத்திலும் போர் மூளும் ஆபத்து உருவாகியுள்ளது. இரு நாடுகளும் தங்களின் எல்லை ராணுவத்தை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, இந்தியாவின் பதுங்கு குழிகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை மகிழ்ச்சிப்படுத்தவே ஆக்கிரமிப்பை இந்தியா மேற்கொள்வதாக குற்றம்சாட்டிய சீனா, இந்தியாவுடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அடாவடியாக தெரிவித்துள்ளது. போதாகுறைக்கு இந்தியாவிடம் உள்ள ஆயுத பலத்தால் சீனாவை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும் சவால் விட்டுள்ளது சீனா.

இந்நிலையில் கடந்த ஆண்டின் நிலவரப்படி இருநாடுகளின முப்படையின் பலம் குறித்த தகவல்களைக் காணலாம்...

போர்வீரர்கள் எண்ணிக்கை

போர்வீரர்கள் எண்ணிக்கை

கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவிடம் 616000000 போர் வீரர்கள் இருந்தனர். சீனாவிடம் 75000000 போர் வீரர்கள் இருந்தனர். இந்தியாவில் தற்போது பணியில் 1325000 போர் வீரர்கள் பணியில் உள்ளனர். சீனாவில் 2335000 போர்வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ராணுவ ஹெலிகாப்டர்கள்

ராணுவ ஹெலிகாப்டர்கள்

இந்தியாவிடம் 2086 போர் விமானங்கள் உள்ளன. சீனா 2942 போர் விமானங்களை வைத்துள்ளது. இந்தியாவிடம் 646 ஹெலிக்காப்டர்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சீனாவிடம் 802 ராணுவ ஹெலிக்காப்டர்கள் உள்ளன. இந்தியாவிடம் தாக்கக்கூடிய ஹெலிக்காப்டர்கள் 19 மட்டுமே உள்ளது. ஆனால் சீனாவிடமோ 200 தாக்கி அழிக்கும் ஹெலிக்காப்டர்கள் உள்ளன. தாக்கக்கூடி சிறிய ரக போர் விமானங்கள் இந்தியாவிடம் 809 தான் உள்ளது. சீனாவிடமோ 1385 சிறிய ரக போர் விமானங்கள் உள்ளன.

போர் விமானங்கள்

போர் விமானங்கள்

ஃபைட்டர் ஏர்கிராஃப்ட்டுகள் இந்தியாவிடம் 679 உள்ளது. சீனாவிடம் இருமடங்காக 1230 ஏர்கிராஃப்ட்டுகள் உள்ளன. இந்தியாவிடம் பயிற்சி போர் விமானங்கள் 318 உள்ளது. சீனாவிடம் 352 பயிற்சி போர் விமானங்கள் உள்ளன.வீரர்கள் பயணிக்கும் வகையில் இந்தியாவிடம் 857 போர் விமானங்கள் உள்ளன. சீனாவிடம் 782தான் உள்ளது. உபயோகப்படுத்தும் வகையில் இந்தியாவிடம் 346 விமான நிலையங்கள் உள்ளன. சீனாவிடம் 507 விமான நிலையங்கள் இருக்கிறது.

ராணுவ டேங்குகள்

ராணுவ டேங்குகள்

இந்தியா 6464 ராணுவ டேங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் சீனாவோ 9150 டேங்குகளை வைத்திருக்கிறது. ஆயுதங்களுடன் கூடிய வாகனங்கள் இந்தியாவிடம் 6704 உள்ளது. சீனாவிடம் 4788 வாகனங்கள் தான் உள்ளது. இந்தியாவிடம் தானியங்கி துப்பாகிகள் 290 தான் உள்ளது. ஆனால் சீனாவிடமோ 1710 துப்பாக்கிள் உள்ளன. இந்தியாவிடம் 7414 ஆர்ட்டிலெரிகள் உள்ளன. சீனாவிடம் 6246 ஆர்ட்டிலெரிகள் உள்ளது.

துறைமுகங்கள்-முனையங்கள்

துறைமுகங்கள்-முனையங்கள்

இந்தியாவிடம் 292 எம்எல்ஆர்எஸ்கள் உள்ளன. சீனாவிடம் 1770 எம்எல்ஆர்எஸ்கள் உள்ளன. வர்த்தக கடல் வலிமைகள் இந்தியாவிடம் 340 தான் உள்ளது. சீனாவிடம் 2030 வர்த்தக கடல் வலிமைகள் உள்ளன. முக்கிய முனையங்கள் மற்றும் துறைமுகங்கள் இந்தியாவிடம் 7 உள்ளது. சீனாவிடம் 15 துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் உள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல்கள்

நீர்மூழ்கிக் கப்பல்கள்

இந்தியாவிடம் 295 கடற்படை பிரிவுகள் உள்ளன. சீனாவிடமோ 714 கடற்படை தளங்கள் உள்ளன. விமானம் தாங்கி கடற்படை தளம் இந்தியாவிடம் ஒன்றுதான் உள்ளது. சீனாவிடமும் ஒன்றுதான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் 14 நீர் மூழ்கிக்கப்பல்கள் தான் உள்ளன. ஆனால் சீனாவிடம் 68 நீர் மூழ்கிக்கப்பல்கள் உள்ளன. இந்தியாவிடம் 14 போர்க்கப்பல்கள் உள்ளன. சீனாவோ 48 போர்க்கப்பல்களை வைத்துள்ளது. அழிக்கும் வல்லமை கொண்ட ஆயுதங்கள் இந்தியாவிடம் 10 தான் உள்ளது. ஆனால் சீனாவிடம் 32 உள்ளது.

பல மடங்கு அதிகரித்திருக்கும்

பல மடங்கு அதிகரித்திருக்கும்

இந்தியவிடம் 26 வழித்துணைக்கப்பல்கள் உள்ளன. சீனாவிடமும் 26 வழித்துணைக்கப்பல்கள் தான் உள்ளன. இந்தியாவிடம் 135 ரோந்து கப்பல்கள் உள்ளன. சீனாவிடம் 138 ரோந்து கப்பல்கள் உள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு இரு நாடுகளும் ஐநாவில் அளித்த தகவல்கள் ஆகும். இந்த ஆண்டு இது மேலும் பலமடங்கு அதிகரித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

English summary
There is a danger of war between India and China at any time. The tension has increased since both countries have concentrated their border army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X