2 மாத தேடல் முடிந்தது... இன்போசிஸ் நிறுவன சிஇஓவாக சலில் எஸ்.பரேக் நியமனம்!
இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனராக சலில் எஸ். பரேக் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் மேலாண்மை இயக்குனராக சலில் எஸ். பரேக் நியமிக்கப்பட்டுள்ளார். கேப் ஜெமினி நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ள பரேக் ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களில் முன்னணியான இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளை விஷால் சிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார். இன்போசிஸ் குழு உறுப்பினர்கள் தன் மீது வைக்கும் தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களே ராஜினாமா செய்வதற்கான காரணம் என்று சிக்கா கூறியுள்ளார்.ஐடி நிறுவனங்களில் முன்னணியான இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளை விஷால் சிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார். இன்போசிஸ் குழு உறுப்பினர்கள் தன் மீது வைக்கும் தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களே ராஜினாமா செய்வதற்கான காரணம் என்று சிக்கா கூறியுள்ளார்.

விஷால் சிக்காவின் ராஜினாமாவை அடுத்து அந்த பொறுப்பிற்கு இடைக்கால சிஇஓவாக பிரவீன் ராவ் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே இந்த நிறுவனத்தில் தலைமை ஆபரேட்டிங் அதிகாரியாக இருந்து வந்தார். எனினும் இன்போசிஸ் நிறுவனத்திற்கான அடுத்த சிஇஓவை தேர்ந்தெடுக்கும் பணி 2 மாத காலத்திற்கு மேல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் அளித்துள்ள தகவலில், இன்போசிஸ் புதிய சிஇஓ மற்றும் எம்டியாக சலில் எஸ். பரேக் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனம் மற்றும் ஊதியக் குழுநியமனம் மற்றும் ஊதியக் குழு பரிந்துரையின் பேரில் பரேக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்போசிஸ் மும்பை பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது. நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதோடு அதன் பெருமைகளை காப்பாற்றுவார் என்ற அடிப்படையில் பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்போசிஸ் மேலும் கூறியுள்ளது.
பரேக் தற்போது பிரெஞ்ச் நாட்டின் ஐடி சேவை வழங்கும் நிறுவனமான கேப் ஜெமினியில் செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியர் மற்றும் மெகானிக்கல் என்ஜினியரிங்களில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளைப் படித்துள்ளார். இளநிலை படிப்பை மும்பை ஐஐடியில் ஏரோநாடிக்கல் என்ஜினியரிங் பயின்றுள்ளார்.
நந்தன் நீலகேணி ஐடி பிரிவின் நிர்வாகி அல்லாத தலைவராக நீடிப்பார் என்றும் பரேக் ஜனவரி 2ம் தேதி பொறுப்பேற்பார் என்றும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications