பிஜூ ஜனதா தளத்தின் கோட்டை.. ஒடிசாவின் கேந்திரபாரா தொகுதியில் டஃப் கொடுக்கும் பாஜக! வெற்றி யாருக்கு?
புவனேஸ்வர்: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் ஒடிசா மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி ஒடிசாவின் நட்சத்திர லோக்சபா தொகுதியான கேந்திரபாரா குறித்து விரிவாக அலசுகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் 19 ஆம் தேதி 102 தொகுதிகளில் தேர்தல் தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதில், ஒடிசா மாநிலத்தை பொறுத்த அளவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் vs பாஜக vs காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இந்தமுறை தனித்து போட்டியிடுகிறது. பாஜகவும் 21 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை பொறுத்த அளவில், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தொகுதிக்கான பிரச்சினை: கேந்திரபாராவை பொறுத்த அளவில், இந்த லோக்சபா தொகுதியில் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் முதன்மையான கோரிக்கையாக இருக்கிறது. அதேபோல சித்ரோத்பாலா நதியை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் இந்த தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இது தவிர உள்ளூரில் வேலை வாய்ப்பை அதிகரிக்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும், பெண்களின் கல்வியை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் இந்த தொகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2 தேர்தல்கள்: இந்த தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டிலிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 1985 வரை வெவ்வேறு கட்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும், 1989ல் தொடங்கி 2019 வரை இங்கு பிஜூ ஜனதா தளம்தான் வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பிஜூ ஜனதா தள வேட்பாளர் அனுபவ் மோஹன்டி 6.2 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல, பாஜக வேட்பாளர் 4.4 லட்சம் வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 1.1 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
2014ம் ஆண்டு தேர்தல்: இதில் பிஜூ ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட பைஜெயந்த் பாண்டா 6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 3.9 லட்சம் வாக்குகளையும், பாஜக வேட்பாளர் 1.1 லட்சம் வாக்குகளையும் பெற்றனர். 2009 மற்றும் 2014ம் ஆண்டு பிஜூ ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட பைஜெயந்த் பாண்டாவுக்கு 2019ம் ஆண்டு சீட் வழங்கப்படவில்லை. எனவே, அவர் பாஜகவுக்கு தாவி 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
2024 வேட்பாளர்கள்: இருப்பினும் இந்த முறையும் அவருக்கு பாஜக சீட் கொடுத்திருக்கிறது. பிஜூ ஜனதா தளம் சார்பில் அன்ஷுமான் மொஹன்டிக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தேர்தலில் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததாலும், புவனேஸ்வர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்று இறுதி செய்வதில் இழுபறி நீடித்ததாலும் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
வெற்றி வாய்ப்பு: இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளை பொறுத்த அளவில், பிஜூ ஜனதா தளத்தின் வேட்பாளர்கள்தான் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த தொகுதியிலும் வெற்றி பிஜூ ஜனதா தளத்துக்குதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், பிஜூ ஜனதா தளத்திலிருந்து பாஜகவுக்கு அணி மாறிய பைஜெயந்த் பாண்டாவுக்கு தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் இருப்பதால் கடும் போட்டி நிலவலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஒடிசாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக பிஜூ ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்தான் இருந்து வருகிறார். எனவே வேலைவாய்ப்பு, புலம் பெயர் தொழிலாளர்கள், அடிப்படை கட்டமைப்புகள் மேம்பாடு உள்ளிட்டவற்றில் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி நிலவி வருகிறது. மட்டுமல்லாது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த கையோடு, சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பிஜூ ஜனதா தளத்திற்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications