For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி தேர்தல்: 'நோட்டா'வை பயன்படுத்த முஸ்லிம்களுக்கு மதத்தலைவர்கள் கட்டளை

By Mathi
Google Oneindia Tamil News

Islamic religious leaders ask voters of their community to reject all political parties
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்குமே வாக்களிக்க விரும்பவில்லை என நோட்டா பட்டனை பயன்படுத்துங்கள் என்று முஸ்லிம்களுக்கு மதத் தலைவர்கள் கட்டளை பிறப்பித்திருக்கின்றனர்.

டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் இஸ்லாமிய மதத்தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அனைத்திந்திய தன்சீம் உலமா.இ.இஸ்லாமி இயக்கத்தின் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய தலைமை மதகுரு முப்தி இஷ்தியாக் ஹுசேன் காத்ரி கூறுகையில், மதச்சார்பற்ற கட்சிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று முஸ்லிம்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்த கட்சிகளுக்கு எல்லாம் நமது ஆற்றாமையையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் விதமாக யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்னும் நோட்டா'வில் மட்டும் உங்கள் வாக்குரிமையை பதிவு செய்யுங்கள்.

நாட்டின் பெரிய அளவு மக்கள்தொகையை கொண்ட சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களின் மீது தேர்தல் காலங்களில் மட்டும்தான் அரசியல் கட்சிகளுக்கு அக்கறை ஏற்படுகிறது.

இவர்களுக்கு எல்லாம் பாடம் கற்பிக்கும் விதமாக நோட்டா பட்டனை அழுத்துவதன் மூலம் இழப்பு முஸ்லிம்களுக்கு அல்ல... அரசியல் கட்சிகளுக்குதான் என்பதை நாம் அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்றார்.

English summary
Muslim religious leaders on Monday told Muslim voters to reject all political parties in the ongoing assembly elections, accusing politicians of using the community as a vote bank. We appeal to Muslims not to vote for the so-called secular parties and exercise the 'NOTA' option to express their anger and anguish against all political groups," Mufti Ishtiaq Hussain Qadri told a gathering of over 1,000 religious heads of Islamic institutions in New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X