ஜெகன்மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கிய தொண்டர் தலை நசுங்கி பலி.. ஷாக் வீடியோ
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க அவரது காரில் பூத்தூவிய தொண்டர் சக்கரத்தில் சிக்கினார். அதனை டிரைவர் பார்க்காமல் காரை ஓட்டினார். இதனால் அவரது தலை கார் சக்கரத்தில் சிக்கி நசுங்கியதால் அந்த தொண்டர் பரிதாபமாக பலியானார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பல்நாடு மாவட்டம் ரெண்டபல்லா கிராமத்துக்கு கட்சியை சேர்ந்த ஒருவரின் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று ஆறுதல் கூறினார். அதன்பிறகு ஜெகன்மோகன் ரெட்டி காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் கார் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான செல்லி சிங்கையா (வயது 55) என்பவர், ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க சென்றார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் கார் மீது மலர்களை தூவினார். கூட்டம் அலைமோதியது. ஜெகன்மோகன் ரெட்டியை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். சில தொண்டர்கள் அவரது கார் மீது ஏறினர். செல்லி சிங்கையாவும் காரின் மீது ஏற முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது கால் இடறி செல்லி சிங்கையா கீழே விழுந்தார். இதனை ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவர் கவனிக்கவில்லை. அதேபோல் காரில் நின்ற ஜெகன்மோகன் ரெட்டியும் பார்க்கவில்லை. தொண்டர்களின் கூட்டத்துக்கு நடுவே கார் முன்னோக்கி நகர்ந்தது. இதனால் காரின் சக்கரம் செல்லி சிங்கையாவின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கியது.
இதையடுத்து சிறிது நேரத்தில் போலீசார் மற்றும் தொண்டர்கள் செல்லி சிங்கையாவை மீட்டு அருகே உள்ள குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது.
🚨SHOCKING
— Amitabh Chaudhary (@MithilaWaala) June 22, 2025
Car of Former Andhra Pradesh CM #JaganMohanReddy➕crushed a bystander in Sattenapalle , Andhra . @ncbn @PawanKalyan @APPOLICE100 , what action will be taken against @ysjagan , he was roaming the road show without any permission, such leaders who ruined Andhra during… pic.twitter.com/S5Ci0lh7ko
இதற்கிடையே தான் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க பூத்தூவி காரின் சக்கரத்தில் செல்லி சிங்கையா சிக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த செல்லி சிங்கையா வெங்கலயாபாலம் கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications