• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாய் பல்லவி வைரல் காணொளி: "மதத்தின் பெயரால் தாக்குதல் நடந்தால் அது பாவம்!"

By BBC News தமிழ்
|

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி காஷ்மீரி பண்டிட்டுகள், கும்பல் படுகொலை பற்றி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது தமது கருத்துகளுக்கு விளக்கும் தரும் வகையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.

தெலுங்கில் வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'விராட பருவம்'. ஜூன் 17ஆம் தேதி வெளியான இந்த படத்தையொட்டி நடிகை சாய் பல்லவி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த நேர்காணலில் தெலுங்கு மொழியில் பேசிய அவரிடம் கல்லூரி நாட்களில் ஏதேனும் அரசியலின் தாக்கம் இருந்ததா என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் அரசியல் ரீதியாக நான் நடுநிலையான குடும்பத்திலிருந்து வந்தவள் என்று பதிலளித்தார்,

jai sriram: actress sai pallavi has given clarification over her last interview

அப்போது அவர், ''நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தவன். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யார் சரி, யார் தவறு என்று சொல்ல முடியாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் காஷ்மீரி பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டுகிறது. சமீபத்தில், முஸ்லிம் என சந்தேகப்பட்டு, பசுவை கொண்டு சென்ற நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பினர். காஷ்மீரில் நடந்ததற்கும் சமீபத்தில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம்?" என்று பேட்டியில் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துகள் சர்ச்சையான நிலையில், சாய் பல்லவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சாய் பல்லவி தமது கருத்துகளுக்கு விளக்கும் தரும் வகையில் இன்ஸ்டா பக்கத்தில் காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் நடந்த நிகவ்வை அவர் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.

காணொளியில் என்ன பேசினார்?

https://twitter.com/Sai_Pallavi92/status/1538170542620286978

"ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த உங்கள் அனைவரையும் நான் தொடர்புகொள்வது இதுவே முதல் முறை, என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று நான் கருதுகிறேன். நான் பேசும் வார்த்தைகள் என் மனதில் இருந்து வெளிவரும் முன்பு நான் இரு முறை யோசிப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். எனவே எனது எண்ணங்களைத் தெரிவிக்க வழக்கத்தை விட சிறிது நேரம் எடுத்தால் என்னை மன்னியுங்கள், "என்று கூறி நடந்த நிகழ்வுகளை இன்ஸ்டா காணொளியில் சாய் பல்லவி விவரித்தார்.

சமீபத்தில் நான் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநரை சந்திக்க நேர்ந்தபோது ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எனது ஆழ்ந்த வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனால், கோவிட் நேரத்தில் பசுக்களை ஏற்றிச்சென்ற இஸ்லாமியர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டது என் மனதை மிகவும் பாதித்தது என்று சாய் பல்லவி தெரிவித்தார்.

அதை விவரித்த அவர், சமீபத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் ஓட்டுநரை சிலர் அடித்துத் தாக்கி, 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்க கட்டாயப்படுத்தினர். நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம். உங்கள் கேள்விக்கு பதிலளிக்க, நீங்கள் ஒரு நல்ல மனிதராக இல்லாவிட்டால், வலது பக்கத்திலும் அல்லது இடது பக்கத்திலும் கூட நியாயம் இருக்காது. நான் மிகவும் நடுநிலையாக இருப்பவள் என்று பேசியதாக சாய் பல்லவி காணொளியில் கூறுகிறார்.

உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை

கொரோனா காலத்தில் நடந்த கும்பல் தாக்குதல் சம்பவங்களுடன் நான் எந்த நிலையிலும் ஒத்துப்போபவள் கிடையாது. அதுவும் அந்த இஸ்லாமியர் தாக்கப்படும் காட்சியைப் பார்த்து குலைநடுங்கி நாட்கணக்கில் நான் பாதித்திருந்தேன். வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அது தவறு என்று நினைப்பவள் நான். அதுவும் எந்த மதத்தின் பெயரால் வன்முறை நடந்தாலும் அது பாவம் என்று சாய் பல்லவி கூறினார்.

உணர்ச்சிமயத்துடன் இடைவெளி கொடுத்து காணொளியில் தமது விளக்கத்தை தொடரும் சாய் பல்லவி, இதைத்தான் நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், கும்பல் கொலையை நியாயப்படுத்தி பலரும் ஆன்லைனில் கருத்துக்களை பகிர்ந்ததை பார்த்து மிகவும் பாதிக்கப்பட்டேன். நம்மில் எவருக்கும மற்றவர்களின் உயிரை பறிக்கும் உரிமை இல்லை என நான் கருதுபவள். ஒரு மருத்துவ பட்டதாரி என்ற முறையில் எல்லா உயிர்களும் சமம், எல்லா உயிர்களும் முக்கியம், என்று பேசினார்.

மேலும், ஒரு குழந்தை பிறந்து தன் அடையாளத்தைக் கண்டு பயப்படும் நாள் இனி வராது என்று நம்புகிறேன். நாம் அதை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனது பதினான்கு வருட பள்ளி வாழ்க்கையில், தினமும் இந்தியர்கள் அனைவரும் என் சகோதர, சகோதரிகள். என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும், பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன் என பிரார்த்தனை செய்து வந்தது என மூளையில் ஆழமாக பதிந்து விட்டது. சிறாராக கலாசாரம், ஜாதி, மதம் அடிப்படையில் சக மாணவர்களை நாம் பிரித்துப் பார்த்தில்லை. எனவே, எப்போது நான் பேசினாலும் அந்த கருத்துக்கள், நடுநிலைத்தன்மையுடனேயே வெளிவரும். ஆனால், நான் பேசியது முற்றிலும் மாறுபட்ட வகையில் வெளிப்படுத்தப்பட்டதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்று சாய் பல்லவி தெரிவித்தார்.

அதவும், முக்கிய பிரபலங்கள், இணையதளங்கள் கூட, பழைய பேட்டியில் நான் பேசிய குறிப்பிட்ட பகுதியை அதன் முழு காணொளியையும் பார்க்காமல் உண்மைத்தன்மையை அறியாமல் தகவல் பகிர்ந்தார்கள். என்னுடன் இந்த நேரத்தில் உறுதுணையாக நின்றவர்களுக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியது தவறுதானோ என்றும் முரண்பட்டதாகவும் உணர்ந்து வந்தேன். ஆனால், நான் தனியாக இல்லை என்று உணரும் வகையில், எனக்காக பலரும் நினைநின்று ஆதரவாக பேசியதற்காக நன்றி. எல்லோருக்கும் மகிழ்ச்சி, அமைதி, அன்பு நிறையட்டும் என்று விரும்புகிறேன் என்று பேசி சமீபத்திய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சாய் பல்லவி முற்பட்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
jai sriram: actress sai pallavi has given clarification over her last interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X