For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் டிடிசி தேர்தலில் மக்கள் கூட்டணி மகத்தான வெற்றி - பாஜக 70, காங்கிரஸ் 21

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தபோதிலும், அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குப்கர் பிரகடனம் என்பது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தேசிய மாநாட்டு கட்சி தலைவரின் குப்கர் இல்லத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட தீர்மானமாகும். ஜம்மு- காஷ்மீரின் அடையாளம், சுயாட்சி, சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை பாதுகாப்பது இப்பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்காக குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில், 7 அரசியல் கட்சிகள் உள்ளன. இதன் தலைவர் உமர் அப்துல்லா, துணைத் தலைவர் மெகபூபா முப்தி உள்ளனர். பாஜகவை எதிர்க்க பரம வைரிகள் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

தொடரும் விமர்சனங்கள்.....கேட்ட 40 தொகுதி கிடைக்காதவரை குடைச்சல்தான்... அதிமுகவை மிரட்டுகிறதா பாஜக? தொடரும் விமர்சனங்கள்.....கேட்ட 40 தொகுதி கிடைக்காதவரை குடைச்சல்தான்... அதிமுகவை மிரட்டுகிறதா பாஜக?

மக்கள் கூட்டணி

மக்கள் கூட்டணி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அண்மையில் 280 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப அளிக்க வேண்டும் வலியுறுத்தும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்பட 7 மாநில கட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி என்று ஒரு அணியாக போட்டியிட்டன. அதேசமயம் அந்த கட்சிகளின் பரம எதிரியான பாஜக தனித்து போட்டியிட்டது. பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் தனித்து களமிறங்கியது.

வெற்றி நிலவரம்

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பாஜக 70 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் 46 இடங்களில் வென்றனர். ஜம்மு காஷ்மீர் பிடிபி கட்சி 26 இடங்களிலும் இந்திய தேசிய காங்கிரஸ் 21 இடங்களிலும் வென்றுள்ளது. ஜெகேஏபி கட்சி 10 இடங்களிலும் ஜெகேபிசி கட்சி 6 இடங்களிலும் ஜெகேபிஎம் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளது.

அதிக வாக்குகள் பெற்ற பாஜக

அதிக வாக்குகள் பெற்ற பாஜக

இந்த தேர்தலில் தனித்த கட்சியாக பாஜக 70 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 26 இடங்களில் வெற்றிகளுடன் 3வது இடத்தை பிடித்தது. மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் அதிக இடங்களை மக்கள் கூட்டணி வென்றபோதிலும், பாஜகதான் இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற அரசியல் கட்சியாக உள்ளது. 70 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மொத்தம் 4.42 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. 56 இடங்களை கைப்பற்றிய தேசிய மாநாட்டு கட்சி மொத்தம் 2.11 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 4வது இடம்

காங்கிரஸ் கட்சிக்கு 4வது இடம்

காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 4வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த தேர்தலில் 21 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அந்த கட்சிக்கு 1 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.

தகுந்த பாடம்

தகுந்த பாடம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இந்த வெற்றிக்கு மகிழ்ச்சியடைந்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் அதன் பினாமி அரசியல் கட்சிக்கும் தகுந்த பாடம் என்று கூறி உள்ளார்.. மேலும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவை மக்கள் நிராகரித்ததாகவும் கூறி உள்ளார்.

English summary
Jammu and Kashmir DDC Election Results 2020. The People's Alliance led by Farooq Abdullah has won a landslide victory in the Kashmir District Development Council elections. The BJP won 70 seats and came in second, but won by a large margin. The Congress party has been sadly pushed to fourth place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X