For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு 152 அடி... மோடியிடம் ஜெ. வைத்த 29 கோரிக்கைகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமரை நேரில் சந்தித்த அவர் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்.

Jaya pressures Modi to form Cauvery Water Management Board

நதி நீர் இணைப்பை நடைமுறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தார்.

பிரதமர் மோடி- ஜெயலலிதா சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது. மோடியிடம் ஜெயலலிதா அளித்த கோரிக்கை மனுவின் முக்கிய அம்சங்கள்:

•காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

•சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்

•முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்

•மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும்

•தமிழக அரசு பரிந்துரைத்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்

•ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

•நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

•மாநில அரசு பரிந்துரைத்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

•மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் அமல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக்கூடாது. தமிழகத்திற்கு நிரந்தர விதி விலக்கு தேவை

•21 மீனவர்களையும், 92 படகுகளைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

• தமிழக கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்.

• தமிழகத்திற்கான உணவு தானிய ஒதுக்கீட்டை குறைக்க கூடாது

• இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும்

• மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும்

•கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க வேண்டும்

•தமிழகத்திற்கான மண்ணெண்ணை ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது

•தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

•மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

•தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

•அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

•கூடங்குளம் 2வது அலகில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும்.

•இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க வேண்டும்

•கெயில் நிறுவனம் அமைக்க உள்ள எரிவாயு குழாய் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்

• 25,912 கோரி தேசிய பேரிடர் நிதியிலிருந்து பெற 2 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 1735 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வெள்ளநிவாரணம், புணரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa met Narendra Modi on Tuesday in Delhi. She Submits memorundam and urged him to order the constitution of the Cauvery Management Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X