For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் முதல்வர் ஹேமந்த் சோரன்! 48 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்கு

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வரும் நிலையில், இன்று அவர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது. மொத்தம் 48 எம்எல்ஏக்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை இவர் தனது முதல்வர் பதவியை பயன்படுத்தி சட்ட விரோதமாக குத்தகைக்கு எடுத்ததாக புகார் உள்ளது.

இந்த குத்தகை மூலம் இவர் ஆதாயம் அடைந்ததாக வைக்கப்பட்ட புகாரில் பாஜக இவரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

 முற்றும் அரசியல் நெருக்கடி.. ஜார்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்புவாரா ஹேமந்த் சோரன்? முற்றும் அரசியல் நெருக்கடி.. ஜார்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்புவாரா ஹேமந்த் சோரன்?

 ஜார்கண்ட்

ஜார்கண்ட்

இந்த நிலையில் பாஜக கோரிக்கையை ஏற்று இவரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு தோ்தல் ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ பரிந்துரை கடிதம் இன்னும் வெளியாகவில்லை. ஆளுநர் இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் எம்எல்ஏ பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹேமந்த் சோரன்

ஹேமந்த் சோரன்

முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வரும் நிலையில், இன்று அவர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து இந்த கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது. அங்கு சட்டசபையில் மொத்தம் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பாஜக பிளான்

பாஜக பிளான்

அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 1 எம்எல்ஏ உள்ளார். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு பங்கெடுக்க உள்ளது. சமீபத்தில் பாஜக சார்பாக இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதோடு ஆளுநரும் திடீரென டெல்லி சென்றார்.

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிரா நிலை

இதனால் அங்கு பாஜக ஆட்சி அமைக்க திட்டம் எதுவும் போடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களை மொத்தமாக அணி மாற வைத்து, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து அங்கு பாஜக கூட்டணி ஆட்சி வந்தது. அதேபோல் ஜார்கண்டிலும் ஹேமந்த் சோரனை தனித்து விட்டு.. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை உடைத்து பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிடுவதாக புகார் எழுந்தது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இந்த நிலையில்தான் ஹேமந்த் சோரன் இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்து உள்ளார். கடந்த சில நாட்களாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் எல்லோரும் சட்டீஸ்கரில் தங்க வைக்கப்பட்டனர். பாஜக இவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவர்களை அங்கு உள்ள ரிசார்ட்டில் ஹேமந்த் சோரன் தங்க வைத்தனர். இவர்கள் இன்று காலை ஜார்கண்ட் வந்தனர். இன்று காலை 12 மணிக்கு அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்தது. மொத்தம் 48 எம்எல்ஏக்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். மொத்தமாக காங்கிரஸ் 18 எம்எல்ஏக்கள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 29 எம்எல்ஏக்கள் (சபாநாயகர் தவிர்த்து), ஆர்ஜெடி எம்எல்ஏ ஒருவர் என்று 48 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்தது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்த பின், முதல்வர் ஹேமந்த சோரன் பாஜகவை தாக்கி கடுமையாக பேசினார். இந்தியாவை அலங்கோலமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது பாஜக. ஒரு சிலருக்காக மட்டும் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சில வியாபாரிகளுக்காக ஆட்சி செய்து வருகிறது பாஜக. குதிரை பேரங்கள் மூலம் பாஜக ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறது. மக்கள் வாக்களித்து வெற்றிபெற முடியாத பாஜக குறுக்கு வழியில் குதிரை பேரம் மூலம் ஆட்சிக்கு வர பார்க்கிறது, என்று பேசினார். இதை எதிர்த்து பாஜக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

English summary
Jharkhand Chief Minister Hemant Soren will prove his confidence in the trust vote today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X