For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ்!

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட் கிழக்கில் முதல்வர் ரகுபர் தாஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரை விட 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் சுயேச்சை வேட்பாளர் சரயு ராய்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பிறகு மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஜாம்ஷெட் கிழக்கு தொகுதியில் பின்தங்கியிருந்த ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் தற்போது முன்னிலையில் உள்ளார்.

சிறைக்கு

சிறைக்கு

அது போல் முதலில் முன்னிலை வகித்து வந்த சரயு ராய் தற்போது பின் தங்கியுள்ளார். இவர் ஊழலை எதிர்த்து போராடியவர். பீகாரில் கால்நடை தீவன ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து லாலு பிரசாத் உள்பட பல அரசியல்வாதிகளை சிறைக்கு அனுப்பியவர்.

சுயேச்சை

சுயேச்சை

பின்னர் மேற்கண்ட நிலை மாறி விட்டது. ஜார்க்கண்ட் முதல்வரான பாஜக வேட்பாளர் ரகுபர் தாசை விடவும் 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் சுயேச்சை வேட்பாளர் சரயு ராய்.

அவதூறு கருத்துகள்

அவதூறு கருத்துகள்

இந்த தொகுதியில் ரகுவர் தாஸ் தொடர்ந்து 5 தேர்தல்களாக வெற்றி பெற்று வருகிறார். ரகுபர் தாஸ் அமைச்சரவையில் சட்டசபை விவகாரங்கள் துறை, உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த சரயு, முதல்வர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.

பாஜகவிலிருந்து நீக்கம்

பாஜகவிலிருந்து நீக்கம்

இதையடுத்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே அவர் ரகுபர் தாஸை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார். இதையடுத்து இவர் மீது பாஜக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 6 ஆண்டுகளுக்கு அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

English summary
Jharkhand CM Raghubar Das is trailing in Jamshedpur East, his excabinet colleague Sarayu Rai is leading.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X