For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோதிராதித்யாவே கட்சியிலிருந்து விலகியாச்சு.. அப்புறமா வெளியேற்றுறாங்களாம்.. காங்கிரஸ் செம

Google Oneindia Tamil News

போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு

    தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், ஜோதிராதித்ய சிந்தியா, அவுட் ஆப் ரீச் ஆன நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்தித்தார், ஜோதிராதித்ய சிந்தியா. இதையடுத்து அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

    Jyotiraditya Scindia removed from the Indian National Congress

    இந்த சந்திப்புக்கு பிறகு, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியையும், ராஜினாமா செய்வதாக அறிவித்தார் அவர். ராஜினாமா கடிதத்தை சோனியாவுக்கு அனுப்பினார்.

    18 வருடங்களாக காங்கிரஸ் உறுப்பினராக இருந்துள்ளேன். இப்போது விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக இந்த பாதை அதுவாகவே உருவாகிவிட்டது.

    இந்த நாட்டின் மற்றும் மாநிலத்தின் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு உள்ளது. இந்த கட்சியில் இருந்து கொண்டு இனியும் அதை செய்ய முடியாது என நம்புகிறேன். எனது மக்களுக்காக நான் புதிய ஆரம்பத்தை தொடங்குகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம் ஊடகங்களில் வெளியான அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு, ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரசிலிருந்து நீக்குவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கை என்று இதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. கட்சி பொதுச் செயலாளர் வேணுகோபால் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    சிந்தியா ராஜினாமா செய்த பிறகு, கட்சியை விட்டு தூக்குவதாக அறிவித்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    KC Venugopal, Congress: The Congress President has approved the expulsion of Jyotiraditya Scindia from the Indian National Congress with immediate effect for anti-party activities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X