ஜனாதிபதி மாளிகை விருந்தில் ஒபாமாவுக்காக காத்திருக்கும் நம்ம ஊரு ‘செட்டிநாடு சிக்கன்’!
டெல்லி: குடியரசு தின விழாவுக்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இன்று இரவு, ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி விருந்து அளிக்கிறார்.
இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. விமானம் வாயிலாக டெல்லி வந்திறங்கிய ஒபாமா, இரவு ஜனாதிபதி மாளிகை விருந்தில் கலந்து கொள்கிறார்.

இந்த விருந்தில், ஒபாமா மனைவி மிஷல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விருந்தில் பரிமாறப்பட உள்ள உணவு வகைகள்:
*சிம்லாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, 'டிரவுட்' மீன் பொரியல்.
*வெல்லத்தால் செய்யப்பட்ட, 'சந்தேஷ்' எனப்படும் பெங்காலி இனிப்பு.
*மோர்க்குழம்பு போன்ற, 'கடி' எனப்படும் குஜராத்தி வகை சைடு டிஷ்.
* புகழ்பெற்ற தமிழகத்தின், 'செட்டிநாடு சிக்கன்' வகைகள்.
*அலகாபாத் ஸ்டைல், 'கெபாப்' இறைச்சி.
*கோவா கறிக்குழம்பு மற்றும் பஞ்சாபி உணவு வகைகள்.
ஜனாதிபதி மாளிகையின் தலைமை சமையல்காரர் மச்சீந்திரா கச்சோரி தலைமையில், ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள பிரபல சமையல்காரர்கள் இந்த உணவு வகைகளை தயார் செய்யவுள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications