For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவை சேர்ந்த நிர்மலா சீதாராமன்.. அடித்துவிட்ட மோடி.. குட்டு வைத்த கன்னடர்கள்

கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தவறான தகவல்களை பேசி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தவறான தகவல்களை பேசி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார். நிர்மலா சீதாராமனை கன்னட பெண் என்று கூறியது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Kannadigas trolling PM Modi as he said that Nirmala Seetharaman a Kannadiga in campaign

இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் பல்லாரி தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தவறான தகவல்களை பேசி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார். அதில் பேசிய அவர் பாஜக எப்போதும் பெண்களுக்கு மதிப்பளிக்கும், ஆட்சியில் கூட பெண் ஒருவர்தான் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கூறினார்.

அதோடு, ''கர்நாடக பெண்ணை பாதுகாப்பு துறை அமைச்சராக நியமித்து இருக்கிறேன். கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் நிர்மலா சீதாராமன். அதேபோல் கர்நாடகாவை சேர்ந்த வெங்கையா நாயுடுதான் துணை குடியரசுத்தலைவர்'' என்றுள்ளார்.

தற்போது கன்னடர்கள் மோடியின் இந்த பேச்சை வைத்து கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.தமிழ் பெண்ணை கன்னடர் என்றதால் கன்னடர்கள் டிவிட்டரில் கொந்தளித்து போய் உள்ளனர். எப்படி ஒரு தமிழ்ப்பெண்ணை கன்னடர் என்று கூறலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மோடியே குழம்பிப் போய் கன்னடர் என்று கூறி இருப்பார் போல!

English summary
Karnataka Elections 2018: Kannadigas trolling PM Modi as he said that Nirmala Seetharaman a Kannadiga in campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X