For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியாவுடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை... தமிழக காங். தலைவராகிறார்?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளரும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான கராத்தே தியாகராஜன் நேற்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கராத்தே தியாகராஜன் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில்தான் வென்றது. தேர்தல் முடிந்த கையோடு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது புகார்கள் டெல்லி மேலிடத்துக்குப் ரெக்கை கட்டி பறந்தன.

இதனால் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார். இதை டெல்லி மேலிடமும் ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் இளங்கோவனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ரேஸில் யார் யார்?

ரேஸில் யார் யார்?

இதனைத் தொடர்ந்து புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது காங்கிரஸ் மேலிடம். பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் செல்லக்குமார், திருநாவுக்கரசர், வசந்தகுமார் என பலரும் டெல்லியில் முகாமிட்டு சோனியா காந்தியை நேரில் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து பேசிவருகின்றனர்.

சிதம்பரத்தின் பரிந்துரை

சிதம்பரத்தின் பரிந்துரை

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக தமது ஆதரவாளர் கராத்தே தியாகராஜனை நியமிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரிந்துரைத்துள்ளார். இதற்கான தீவிரமான லாபியில் ஈடுபட்டு வரும் சிதம்பரம், தியாகராஜனையும் டெல்லிக்கு அழைத்து முகாமிடச் செய்துள்ளார்.

இதுதான் வியூகமாம்...

இதுதான் வியூகமாம்...

ப.சிதம்பரத்தின் முகாமில் இருக்கும் சீனியரான கே.எஸ். அழகிரி தமக்கு தலைவர் பதவி வேண்டாம் என ஒதுங்கிக் கொள்ள கராத்தே தியாகராஜனை மட்டும் சிதம்பரம் மும்முரமாக பரிந்துரைத்து வருகிறார். தியாகராஜனை தலைவராக்கினால் தமிழக காங்கிரஸ் கட்சியை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்பது சிதம்பரத்தின் வியூகமாம்.

சோனியாவுடன் கராத்தே ஆலோசனை

சோனியாவுடன் கராத்தே ஆலோசனை

சிதம்பரத்தின் இந்த வியூகத்துக்கு முதல் பலனாக கராத்தே தியாகராஜனை நேற்று அழைத்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையின் போது தமிழக அரசியல் நிலவரம், ஆளும் அதிமுகவை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கராத்தே தியாகராஜனை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார் என்ற கிளைமேக்ஸ் விரைவில் தெரிந்துவிடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

English summary
Former Union Minister Chidambaram's supporter Karate Thiagarajan met Congress leader Sonia Gandhi on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X