For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்கில்... எண்ணற்ற இந்திய வீரர்களின் உயிரைக் காத்த இந்தியப் பெருஞ்சுவர்!

Google Oneindia Tamil News

- ரிச்சா பாஜ்பாய்

கார்கில்: கார்கிலில் 1999ம் ஆண்டு நடந்த போரின்போது பல இந்திய வீரர்களின் உயிரைக் காத்த இந்தியாவின் நெடுஞ்சுவர் குறித்து உங்களுக்குத் தெரியுமா...

இந்த சுவரை இந்திய வீரர்கள் ஒரே இரவில் மின்னல் வேகத்தில் கட்டிய கதை தெரியுமா.. மிகுந்த சுவராஸ்யமானது இது.. அத்தோடு பல இந்திய வீரர்களின் உயிரையும், நமது அருமையான தீரர்களையும் இந்த சுவர்தான் காத்தது என்பது வியப்பானது.

ஒரு பெரிய லாரியின் உயரத்திற்கு இந்த சுவரை இந்திய வீரர்கள் ஒரே இரவில் கட்டி நமது படையினருக்கு வரவிருந்த மிகப் பெரிய இழப்புகளை சாதுரியமாக தடுத்து நிறுத்தினர்.

தேசிய நெடுஞ்சாலை 1

தேசிய நெடுஞ்சாலை 1

பாகிஸ்தான் ஊடுறுவல் படையினர், இந்திய வீரர்களை மட்டும் குறி வைக்கவில்லை. மாறாக, தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சென்ற ராணுவத்தின் லாரிகளையும், போக்குவரத்து வாகனங்களையும்தான் முக்கியமாக குறி வைத்தனர்.

சப்ளையைத் தடுப்பது நோக்கம்

சப்ளையைத் தடுப்பது நோக்கம்

இந்தியப் படையினருக்கான உணவு, ஆயுத சப்ளையைத் தடுத்து இந்தியப் படையை திணறடிப்பதே பாகிஸ்தானியரின் குறிக்கோளாக இருந்தது.

மின்னல் வேகத்தில் உயர்ந்த சுவர்

மின்னல் வேகத்தில் உயர்ந்த சுவர்

இதை அறிந்த இந்தியப் படையினர், உடனடியாக அந்த சாலையில் மிகப் பெரிய, உயரமான சுவரைக் கட்டினர். லாரிகள் போவது தெரியாத அளவுக்கு மிகவும் உயரமாக அது கட்டப்பட்டது.

ஒரே இரவில்

ஒரே இரவில்

இந்த சுவரை ஒரே இரவில் நமது வீரர்கள் கட்டியதுதான் விசேஷமானது.

குண்டு வீச்சையும் தாங்கும்

குண்டு வீச்சையும் தாங்கும்

இந்த சுவர் மிகவும் வலிமையாக கட்டப்பட்டது. எந்தவிதமான குண்டு வீச்சையும் தாங்கக் கூடிய வகையில் அதைக் கட்டினர் இந்தியப் படையினர்.

இந்தியப் பெருஞ்சுவர்

இந்தியப் பெருஞ்சுவர்

இந்த சுவரை இந்தியப் பெருஞ்சுவர் என்று இந்தியப் படையினர் அழைக்கிறார்கள். கார்கில் போரின்போது இந்த சுவர், நமது படையினரை பெருமளவு காத்தது.

English summary
During the 1999 Kargil War, the Indian soldiers had built a huge wall with more than the height of a truck, overnight. It is said that the Pakistani intruders had not only targetted the Indian army soldiers, but they had also targeted the army trucks, passing through the National Highway-1. That is why, the brave Indian soldiers built the wall, greater than the height of trucks, to save them from attack from Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X