சம பலத்துடன் லீடிங்.. கர்நாடகத்தில் காங் - பாஜக பலத்த மோதல்.. கெளடா டிமாண்ட் வலுவானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸும், பாஜகவும் சொல்லி வைத்தது போல சம நிலையில் வந்து கொண்டுள்ளன. 3வது கட்சியாக கணிசமான தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம் முன்னணியில் இருந்து வருகிறது.

எதிர்பார்த்தது போலவே தொங்கு சட்டசபையே அமையும் என்பது உறுதியாகி விட்டது. தற்போது காங்கிரஸ், பாஜகவை விட தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் பக்கம்தான் அத்தனை பேரின் பார்வையும் திரும்பியுள்ளது.

3வது இடத்தில் உள்ள தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் தான் யார் அடுத்து ஆட்சியமைக்கப் போவது என்பதை முடிவு செய்யும் சக்தியாக மாறியுள்ளது.

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை

கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் கூட தொங்கு சட்டசபையே அமையும் என கணித்திருந்தன. அதேபோல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் கூட கிட்டத்தட்ட இதே முடிவே வந்தது.

யார் தனிப்பெரும் கட்சி

யார் தனிப்பெரும் கட்சி

தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் வரும் என பல்வேறு கணிப்புகள் கூறியிருந்தன. சில கணிப்புகளில் பாஜகவுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இரு கட்சிகளும் மாறி மாறி முன்னணி வகிக்கின்றன. சம நிலையிலும் வந்து கொண்டுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு

காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு

இந்த நிலையில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் நினைத்தது போலவே காங்கிரஸும், பாஜகவும் சம பலத்துடன் முன்னிலை வகித்து வருகின்றன. இருப்பினும் காங்கிரஸ் தற்போது முதலிடத்தில் உள்ளது.

தேவெ கெளடாவுக்கு 3வது இடம்

தேவெ கெளடாவுக்கு 3வது இடம்

3வது இடத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளது. டிரெண்ட்டைப் பார்க்கும்போது தொங்கு சட்டசபைக்கே வாய்ப்புகள் உள்ளன. 3வது இடத்தில் வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு முக்கியமானதாக மாறி வருகிறது.

கெளடா கட்சியில் லகான்

கெளடா கட்சியில் லகான்

இதை நிலை நீடித்தால் காங்கிரஸோ அல்லது பாஜகவோ தேவெ கெளடாவின் கட்சி ஆதரவு இல்லாமல் அரியனையைப் பிடிக்க முடியாது. அதேசமயம், காங்கிரஸை உடைத்து ஆட்சியமைக்கவும் பாஜக முயலக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka is heading towards Hung assembly as expected as both Congress and BJP are getting almost equal no of seats. JDS is coming third.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற