For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்க செல்போன் காரணம்! கர்நாடக சட்டசபை குழு அறிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: செல்போன்களை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்துவதுதான் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்க காரணம் என்று கர்நாடக சட்டப்பேரவையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல கமிட்டி குற்றம்சாட்டியுள்ளதுடன், கல்வி பயிலும் இடங்களில் செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் பெண்கள் மற்றம் குழந்தைகள் நல கமிட்டி, பேரவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு: இளம் பெண்களை ஈர்க்க செல்போன்களை பயன்படுத்தும் உதாரணங்கள் பல கொட்டிக்கிடக்கின்ன. கல்வி கற்கும் சூழலை செல்போன்கள் சிதைத்து வருகின்றன. எனவே பள்ளி, கல்லூரிகளில் செல்போனை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

Karnataka house panel blames mobiles for rise in rape cases

மிஸ்டுகால் மூலமாக காதலியை பிடிக்கும் வேலையை வாலிபர்கள் செய்து வருகிறார்கள். மிஸ்டு காலுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆண்கள் விரிக்கும் வலையில் பெண்கள் சிக்கிக்கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வரும்வரை சிறுவர், சிறுமிகளுக்கு செல்போன்களை கொடுக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவர் சகுந்தலா ஷெட்டி என்ற பெண் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து ஆண்களை கவருவதால்தான் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக கூறிய அரசியல்வாதிகள், செல்போன்களையும் குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் என்று சர்ச்சை வெடித்துள்ளது.

English summary
After blaming rape on women's style of dressing, the crime is now being linked to mobile phones. A house committee of the Karnataka legislative assembly has recommended that the state government ban mobile phones in schools and colleges, blaming the devices for an unprecedented rise in the number of rape and molestation cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X