For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்களிப்பதை ஊக்குவிக்க புது யுத்தி... கையில் மையை காட்டினால் மாணவர்களுக்கு 4 மதிப்பெண் இலவசம்

கர்நாடகத்தில் வாக்களிப்பதை ஊக்குவிக்க அங்குள்ள பள்ளியில் புது யுத்தி கையாளப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகத்தில் வாக்களிப்பதை ஊக்குவிக்க அங்குள்ள பள்ளியில் புது யுத்தி கையாளப்படுகிறது. பெற்றோர் கைவிரல் மையை காட்டினால் அவர்களின் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கர்நாடகத்தில் இன்று வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

Karnataka school has adopted a unique way to encourage people to vote

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் செய்யப்பட்டன. எனினும் சிலர் வாக்களிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளி ஒன்றில் வாக்களிப்பு என்பதை ஊக்குவிக்க அங்குள்ள பள்ளியில் புது யுத்தி கையாளப்பட்டது. வாக்களித்த பின்னர் பள்ளிக்கு வந்து மாணவர்களின் பெற்றோர் இருவரும் கைவிரல் மையை காண்பித்தால் குழந்தைகளுக்கு 4 மதிப்பெண் இலவசமாக வழங்கப்படும் என்பதுதான் அந்த யுத்தி.

அதன்படி பெரும்பாலான பெற்றோர் வாக்குச் சாவடிகளில் திரண்டு வாக்கு பதிவு செய்தனர். பின்னர் அதை பள்ளிகளில் காட்டி இலவச மதிப்பெண்ணையும் பெற்றுக் கொண்டனர்.

English summary
Karnataka school has adopted a unique way to encourage people to vote. The school has said students will get four extra marks if their parents vote and show their inked finger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X