For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா: காங். 12-18 தொகுதிகளில் வெல்லும்- மோடிக்கு ஆதரவு: சி.என்.என்.- ஐ.பி.என் சர்வே

By Mathi
|

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் 12 முதல் 18 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது சி.என்.என்.- ஐ.பி.என் கருத்து கணிப்பு. ஆனால் நரேந்திர மோடி பிரதமராக இம்மாநிலத்தில் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளதாம்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மாநிலங்களில் எந்த கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும்? எந்தெந்த மாநிலங்களில் யார் பிரதமராக வரலாம்? என்பது தொடர்பாக கருத்து கணிப்புகளை சி.என்.என்.- ஐ.பி.என் வெளியிட்டுள்ளது.

இதில் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக் கருத்து கணிப்பு.

காங்கிரஸுக்கு 12- 18

காங்கிரஸுக்கு 12- 18

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 18 இடங்கள் கிடைக்குமாம். மொத்தம் 46% வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 7-13

பாஜகவுக்கு 7-13

பாரதிய ஜனதாவுக்கு 7 முதல் 13 இடங்கள் கிடைக்குமாம். இந்த கட்சிக்கு மொத்தம் 36% வாக்குகள் கிடைக்குமாம்.

கவுடா கட்சிக்கு முட்டை

கவுடா கட்சிக்கு முட்டை

ஆனால் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது கருத்து கணிப்பு. மொத்தம் 12% வாக்குகளைத்தான் இக்கட்சி பெறுமாம்.

உயர்ஜாதி, லிங்காயத்துகள் பாஜகவுக்கு ஆதரவு

உயர்ஜாதி, லிங்காயத்துகள் பாஜகவுக்கு ஆதரவு

கர்நாடகாவில் உயர்ஜாதியினர் எனப்படுவோரில் 63% பேர் ஒக்கலிகா கவுடாக்களில் 37%, லிங்காயத்துகளில் 59% பேர் பாஜகவை ஆதரிக்கிறார்களாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர்..

இதர பிற்படுத்தப்பட்டோர்..

இதர பிற்படுத்தப்பட்டோரில் 53% பேரும் தலித்துகளில் 55% பேரும் காங்கிரசை ஆதரிக்கிறார்களாம்.

87% இஸ்லாமியர்கள் காங். ஆதரவு

87% இஸ்லாமியர்கள் காங். ஆதரவு

காங்கிரஸ் கட்சிக்கு 87% இஸ்லாமியர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனராம். பழங்குடி இனத்தவரில் 52% காங்கிரஸை ஆதரிக்கிறார்களாம்.

பிரதேச ரீதியாக..

பிரதேச ரீதியாக..

ஹைதராபாத் கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னணியிலும் மும்பை கர்நாடகாவில் காங்- பாஜக இடையே கடும் போட்டியும் நிலவுகிறதாம். மத்திய கர்நாடகாவில் பாஜக, தென் கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறதாம். பெங்களூரில் காங்கிரஸ்தான் முன்னணியாம்.

பாஜகவில் எதியூரப்பா..

பாஜகவில் எதியூரப்பா..

பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் எதியூரப்பா இணைந்ததை மத்திய கர்நாடகாவில் 57% பேர் ஆதரிப்பதாக கூறியுள்ள நிலையில் எதிர்ப்பும் சம அளவில் இருக்கவே செய்கிறது. 47% எதியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைந்ததை எதிர்த்துள்ளனர்.

மத்திய அரசு மீது அதிருப்தி

மத்திய அரசு மீது அதிருப்தி

காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகாவில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் வரக்கூடாது என்று 43% பேர் கூறியுள்ளனர்.

மோடிக்கு 32% ஆதரவு

மோடிக்கு 32% ஆதரவு

இந்த மாநிலத்தில் நரேந்திர மோடிதான் நாட்டின் பிரதமராக வேண்டும் என்று 32% பேரும் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்று 27% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
Karnataka is providing some southern comfort to the Congress. The ruling Congress has maintained a big lead over the main rival BJP in the state. According to CNN-IBN-CSDS-Lokniti-The Week national election tracker and seat projections by Chennai Mathematical Institute Director Rajeeva Karandikar the Congress will emerge victorious in 12-18 seats, BJP 7-13 while others including JDS will win 1-4. Interestingly AAP will fail to open their account as per the survey in the state which has 28 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X