வரே வாவ்... வாட்டர் மெட்ரோ!- சர்வதேச நாடுகள் கொண்டாடும் கொச்சி மெட்ரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் கேரளாவின் 8 வது மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மோடி வருவதையொட்டி கொச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 7 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில் 8வது நகரமாக கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. "வாட்டர் மெட்ரோ' என்ற பெயரில் விரைவில் படகு சவாரியையும் கொண்டு வர கொச்சி மெட்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எந்தவொரு மெட்ரோவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொச்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 23 ரயில் நிலையங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரிய சக்தி மின்சாரம்

சூரிய சக்தி மின்சாரம்

சூரிய சக்தி ஆற்றல் மூலம் மொத்தம் 2.3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மெட்ரோ ரயில் சேவையின் மின்சார தேவையை பாதியாகக் குறைக்கும் சிறப்பம்சம் கொண்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியா முழுமைக்கும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை செயல்படுத்த சிறப்பு கவனம் செலுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இலவச மிதிவண்டி சேவை

இலவச மிதிவண்டி சேவை

கொச்சி மெட்ரோ நிர்வாகம் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இலவசமாக மிதிவண்டி சேவைவை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகள் எந்தவித செலவுமின்றி மிதிவண்டி மூலமாக நகரத்தை சுற்றி பார்க்க முடியும்.

குறுகிய கால திட்டம்

குறுகிய கால திட்டம்

கொச்சியில் வெறும் 45 மாதத்தில் 13 கிலோ மீட்டர் தொலைவுள்ள மெட்ரோ ரயில் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. இது மும்பை மெட்ரோ,சென்னை மெட்ரோ பணிக் காலத்தைவிட மிகவும் குறைந்த காலத்தில் முடிந்துள்ளது.

மும்பை, சென்னை மெட்ரோ

மும்பை, சென்னை மெட்ரோ

மும்பையில் முதற்கட்டமாக 11 கி.மீ தொலைவில் தொடங்கப்பட்ட மெட்ரோ பணிகள் முடிவடைய ஆகிய காலம் 75 மாதங்கள். சென்னையை பொறுத்தவரை முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை முடிவடைய எடுத்துக்கொண்ட காலம் 72 மாதங்கள்.

பெங்களூரு மெட்ரோ

பெங்களூரு மெட்ரோ

8.5 கி.மீ தொலைவிற்கான மெட்ரோ பணிகளுக்கு டெல்லியும், பெங்களூருவும் 50 மாதங்களை எடுத்துக்கொண்டன. ஆனால் கொச்சி மெட்ரோ குறைந்த காலத்தையே எடுத்துக் கொண்டது.

கொச்சியில் 60 திருநங்கைகளுக்கு பணி

கொச்சியில் 60 திருநங்கைகளுக்கு பணி

அதிகப்படியான திருநங்கைகளுக்கு பணி வழங்கிய பெருமையையும் கொச்சி மெட்ரோ தட்டிச் சென்றுள்ளது. கொச்சி மெட்ரோவில் மொத்தமாக 60 திருநங்கைகள் பணியமர்த்தப்பட உள்ளனர். கொச்சி மெட்ரோ வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 80 சதவிகித இடங்கள் வழங்கப்படுகிறது.

வருகிறது வாட்டர் மெட்ரோ

வருகிறது வாட்டர் மெட்ரோ

"வாட்டர் மெட்ரோ' என்ற பெயரில் விரைவில் படகு சவாரியையும் கொண்டு வர கொச்சி மெட்ரோ திட்டமிட்டுள்ளது. இது பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளையும் அதிகம் கவரும் என்பதில் ஆச்சரியமில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kochi Metro Rail Ltd planned to implement Water metro in Kerala. PM Modi inauguration done by today.
Please Wait while comments are loading...