150மிகி விந்தணு.. கிரைம் சீனையே சிதைச்சிட்டாங்க.. கொல்கத்தா பலாத்காரம்.. கண்கள் சிவந்த தலைமை நீதிபதி
டெல்லி: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் இன்று காரசாரமான வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை மத்திய புலனாய்வுத் துறை இன்று சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிபிஐ விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் முன் இன்று அளித்தது.

வாதம்; இந்த வழக்கில் இன்று மனுதாரர்கள் தரப்பு வைத்த வாதத்தில், டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். காரணம் அவர்களுக்கு அச்சம்.
நீதிபதிகள்: யாரை பார்த்து அச்சம்.
மனுதாரர்கள் தரப்பு : எல்லோரையும் பார்த்து.. அரசு மீண்டும் பணிக்கு வந்தால் ஆக்சன் எடுக்கும். வேலைக்கு சென்றால் பாதுகாப்பு இல்லை. வெளியே கலவரர்காரர்கள் இருக்கிறார்கள். சிலர் நாங்கள் போராடியதால் எங்களுக்கு எதிராக கோபத்தில் உள்ளனர்.
மத்திய அரசு தரப்பு: மருத்துவர்களுக்கு கண்டிப்பாக அரசு தரப்பு பாதுகாப்பு தரும். மத்திய அரசு சார்பாக பாதுகாப்பு வழங்கப்படும்.
மனுதாரர்கள் தரப்பு: மருத்துவர்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.. அப்படி இருக்கும் போது உங்களை ஈவ் டீசிங் செய்தால் கூட அதை எதிர்க்கும் மனநிலை இருக்காது.. உடல்வலிமை இருக்காது.. அப்படி இருக்க அந்த மருத்துவரால் என்ன செய்ய முடியும்.. மருத்துவர்களுக்கு தேவையின்றி மிக அதிக நேரம் பணி கொடுக்கப்படுகிறது.
நீதிபதிகள் : நீங்கள் சொல்வது புரிகிறது.. மருத்துவர்கள் மிக அதிக நேரம் பணி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து இது தொடர்பான வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், சிபிஐ தரப்பு புதிய வாதங்களை வைத்தது.
சிபிஐ தரப்பு: கிரைம் சீன் சிதைக்கப்பட்டு உள்ளது. அதை மாற்றி உள்ளனர்.
நீதிபதிகள்: நீங்கள் சொல்லும் அறிக்கைபடி பார்த்தால், கொலை நடந்தது பற்றிய ரெக்கார்ட் காலை 10:10 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குற்றம் நடந்த இடம் இரவு 11:45 மணிக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்டதா. கிட்டத்தட்ட 13 மணி நேரம் கிரைம் சீன் காக்கப்படவில்லை. அப்போது பல மாற்றங்களை செய்து இருப்பார்களே? எப்போது எப்ஐஆர் போடப்பட்டது?
மேற்கு வங்க அரசு: இரவு 11.45 மணிக்கு
நீதிபதிகள்: போஸ்ட் மார்ட்டம் எப்போது செய்யப்பட்டது?
மேற்கு வங்க அரசு: மாலை 6.10 முதல் 7.10 மணிக்கு
நீதிபதிகள்: பிரேதப் பரிசோதனை செய்தபோது, இது இயற்கைக்கு மாறான மரணம் என்பது போலீஸாருக்குத் தெரியாதா? அப்படியானால், இரவு 11:45 மணிக்கு.. காலம் தாழ்த்தி.. இரவு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது எப்படி?

மேற்கு வங்க அரசு தரப்பு : விதிகளின்படி அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றினோம். அதனால் நேரம் எடுத்தது.
கோபம் அடைந்த தலைமை நீதிபதி : உடல் ஒப்படைக்கப்பட்ட 3.15 மணிநேரத்திற்குப் பிறகு ஏன் FIR தாக்கல் செய்யப்பட்டது?"
மேற்கு வங்க அரசு : ஏனென்றால் பாதிக்கப்பட்டவரின் தந்தை இரவு 11:45 மணிக்கு புகார் செய்தார்
தலைமை நீதிபதி சந்திரசூட்: எஃப்ஐஆர் பதிவு செய்ய புகார் தருவது மருத்துவமனையின் கடமை, குறிப்பாக பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் இல்லாத நிலையில் அவர்கள்தான் புகார் தர வேண்டும். இந்த நேரத்தில் முதல்வர் மற்றும் மருத்துவமனை நிர்வாக குழு என்ன செய்து கொண்டிருந்தது?.
மனுதாரர் தரப்பு: மருத்துவர் தாளில் 150 மிகி விந்தணு இருந்துள்ளது. இதை விசாரிக்க வேண்டும்.
நீதிபதிகள்: எங்களிடம் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளது. அதில் உள்ளதை பற்றி மட்டுமே பேசுங்கள். சமூக ஊடக செய்யப்படும் போஸ்டுகளின் அடிப்படையில் சட்ட வாதங்களைச் செய்ய வேண்டாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications