For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பமேளாவில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடினர் - கணக்கை குறைத்து காட்டும் உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே புனித நீராடியதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மொத்தம் 49 லட்சம் பக்தர்கள் நீராடியதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்த நிலையில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடியுள்ளதாக தற்போது அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்து முடிந்த கும்பமேளா திருவிழாவில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளார்கள் என்று மாநில அரசு தெரிவித்தது.

Kumbh Mela Only 21 lakh devotees bathed says Uttarakhand government downplaying the account

நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் நடத்தப்பட்ட கும்பமேளா திருவிழா கொரோனா வைரஸை பரப்பும் சூப்பர்-ஸ்பிரட்டர் என்று சொல்லப்பட்டது.

வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் அதாவது ஏப்ரல் மாதம் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் ஏப்ரல் 2வது வாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.

கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி மட்டும் ஹரித்வாரில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.இந்த கும்பமேளாவில் 3 சஹி புனித நீராடல்கள் முக்கியமாகக் கருதப்பட்டது, ஏப்ரல் 12, 14 மற்றும் 27ஆம் தேதிகளி்ல் புனித நீராடுதல் மிகவும் புனிதமாகக் கருதப்பட்டது. 30 நாட்கள் கும்பமேளா திருவிழாவில் ஏறக்குறைய 70 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் சுகாதாரத் துறையினர், போலீஸார் எனப் பலரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தியும், பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர் .

கும்பமேளாவுக்கான மருத்துவ அதிகாரி அர்ஜுன் சிங் செங்கார், கும்பமேளாவுக்கு வந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கொரோனா விதிகளை மதிக்காமல், சமூக விலகலைக் கடைபிடிக்காமல் ஏராளமானோர் பங்கேற்றதாக தெரிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவிட்-19 பரவலுக்கு மத்தியில் கும்பமேளாவிற்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 24க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் கொரோனா பரவல் 1,800 மடங்கு அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் 1,713 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்தது. உத்தகாண்ட் மாநில அரசை ஹைகோர்ட் கடுமையாக சாடியது. கும்பமேளா மிகப்பெரும் தவறு என்றும் ஹைகோர்ட் நீதிபதிகள் குட்டு வைத்தனர்.

இதோடு நிறுத்திக்கோங்க.. நான் அப்படியா சொன்னேன்.. பாலியல் சீண்டலை மறுத்த கவுரி கிஷன்! இதோடு நிறுத்திக்கோங்க.. நான் அப்படியா சொன்னேன்.. பாலியல் சீண்டலை மறுத்த கவுரி கிஷன்!

இந்த நிலையில் கும்பமேளாவில் ஏப்ரல் 12 முதல் 14 வரைக்கும் 49லட்சம் பக்தர்கள் நீராடியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற காவல் ஆய்வாளர் சஞ்சய் குன்ஜியல், ஏப்ரல் 12 ஆம் தேதி 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே கும்பமேளாவில் நீராடியதாகவும், ஏப்ரல் 13 அன்று சுமார் 3 லட்சம் பக்தர்களும் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று சுமார் 12 லட்சம் பக்தர்கள் மட்டுமே புனித நீராடியதாகவும் தெரிவித்துள்ளார். முன்பு கூறிய தகவல் தவறாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். ஒரு மாதத்தில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் குறைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Uttarakhand officials in the state government and the district administration, after a detailed review, have assessed that the attendance figure was almost 70% down, to an estimated 15 lakh, for these three days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X