ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் மகிழ்ச்சி- குஷ்பு
தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போவதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
டெல்லி: இளைஞர் காங்கிரசில் உடனடியாக மாற்றங்கள் வரப்போகிறது என்றும் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் சந்தோசப்படுவேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடப்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
குஷ்பு நேற்று டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசினேன். கட்சியில் என்ன மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் கூறினேன்.

ராகுல்காந்தி உற்சாகமாக இருக்கிறார். இளைஞர் காங்கிரசில் உடனடியாக மாற்றங்கள் வரப்போகிறது. சில பணிகளை எனக்கு ராகுல் காந்தி தந்திருக்கிறார். அதை செய்து கொடுக்க வேண்டும். அவர் தலைவராக நியமிக்கப்பட்டால் ரொம்ப சந்தோஷப்படுவோம் என்றார்.
காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் அல்லாத குஷ்பு பொதுக்குழுவில் இடம்பெற்றது எப்படி என்று தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பினார். இது பற்றி குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், யார் இந்த கேள்வியை எழுப்புகிறார்களோ? அவர்கள் அதை உறுதி செய்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும். உறுப்பினராக இல்லாவிட்டால் இந்த அளவுக்கு நான் எப்படி பேச முடியும்? ஒரு செய்தி தொடர்பாளராக எப்படி என்னால் செயல்பட முடியும்? என்று கேட்டார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக இருந்தபோது நான் உறுப்பினர் ஆனேன். 2019ஆம் ஆண்டு வரை அந்த உறுப்பினர் அட்டைக்கு காலக்கெடு உள்ளது. கேள்வி எழுப்புகிறவர்கள் தங்களது வேலையை எப்படி செய்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications