பணத்தை விழுங்கி எஸ்கேப் ஆக முயற்சி.. 300 ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டிய பெண் போலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  65 லட்சத்தை பாம்பு சாப்பிட்டுவிட்டதாக கணக்கு காட்டிய பெண்- வீடியோ

  மும்பை: மும்பையில் பெண் போலீஸ் ஒருவர் 300 ரூபாய் பணம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி இருக்கிறார். ஆனால் லஞ்ச ஒழிப்பு துறையை பார்த்ததும் உடனே அதை வாயில் போட்டு விழுங்கி இருக்கிறார்.

  இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறது.

  அவர் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்தச் சுவாரசியமான சம்பவம் குறித்து புகார் கொடுத்தவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

  பாஸ்போர்ட்டுக்கு பணம்

  பாஸ்போர்ட்டுக்கு பணம்

  கோஹ்லாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் தீபாளி காக்டெ என்ற போலீஸ் அதிகாரிதான் இந்த தவறை செய்துள்ளார். அங்கு பாஸ்போர்ட் சோதனைக்காக வந்தவரிடம் 300 ரூபாய் கேட்டுள்ளார். அவர் இல்லை என்றதும் பணம் எடுத்துக் கொண்டு வந்தால் பாஸ்போர்ட் சோதனை குறித்து யோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

  திட்டம் தீட்டினார்கள்

  திட்டம் தீட்டினார்கள்

  அந்த நபர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை அந்தப் பெண் போலீசுக்கு தெரியாமல் வெளியே ரகசிய கேமரா வைத்துக் கண்காணிக்க திட்டமிட்டு உள்ளார்கள். அதேபோல் அந்தப் பெண் போலீசும் அவரிடம் பணம் வாங்கி இருக்கிறார்.

  விழுங்கினார்

  விழுங்கினார்

  அந்த பணத்தில் கைரேகை கண்டுபிடிக்கும் பொடி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் போலீஸ், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைப் பார்த்த உடன் உடனே அதை வாயிலிட்டு விழுங்கி இருக்கிறார். மொத்தமாக ஒவ்வொரு நோட்டாக மென்றுள்ளார்.

  பணத்தை எடுத்தார்

  பணத்தை எடுத்தார்

  உடனே பக்கத்தில் இருந்த இன்னொரு போலீஸ் அவரின் வாயை மெல்ல விடாமல் பிடித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு அதிகாரி வாயின் உள்ளே விரல்விட்டு பணத்தை மொத்தமாக எடுத்துள்ளார். தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Lady police named Dipali Khadke tries to swallow bribe money but caught by ACM. She is a police officer in Mumbai who had asked bribe for passport verification.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற