"எத்தனை ஆயிரம் கோடிகளை பார்த்த கைக்கு ரூ.93 சம்பளம்......" - லாலுவின் சிறை வாழ்க்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலுவுக்கு தோட்டப்பணிகளை செய்யும் வேலை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நாள் ஒன்றுக்கு அவருக்கு 93ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால விசாரணை முடிந்து ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலு அவரது டுவீட்டரில்; "பா.ஜ.க. கொள்கைகளை பின்பற்றி வாழ்வதை விட சிறையில் சாவதே மேல், சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் " என கூறியிருந்தார்.

Lalus role in the Prison is Gardner and he earns RS93 as salary

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு சிறையில் தோட்ட வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளார். காலை 9 மணி முதல் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் தோட்ட வேலை செய்ய வேண்டும் என்று சிறை நிர்வாகம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு 93 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பல ஆயிரம் கோடிகளை பார்த்த லாலுவின் கைக்கு இன்று செய்யும் வேலைக்காக 93ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lalus role in the Prison is Gardner and he earns RS93 as daily salary. According to Prison rules he must work for 8 hours as Gardner.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற