போதை இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சூடான பிளாஸ்டிக்கை ஊற்றி! முடிகளை பொசுக்கி கொலை.. குஜராத்தில் பகீர்
குஜராத்தில் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கு வந்த நபரின் பிறப்புறுப்பில் உருகிய பிளாஸ்டிக்கை ஊற்றி கொடூரம்
காந்தி நகர்: குஜராத்தில் போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த நபரை கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய அந்தரங்க உறுப்பில் சூடான பிளாஸ்டிக்கை ஊற்றி கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.
புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புகையிலை உ ள்ளிட்டவை எல்லாம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. எனவே எல்லைத்தாண்டி போகும் போது சமூகத்திலும் வீட்டிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உடல்நலம் பாதிக்கப்படுகிறது, அவமானம், பணவிரய் உள்ளிட்டவை நடக்கின்றன. இந்த போதையால் உயிரிழப்பு ஏற்பட்டு குடும்பத்தினர் நடுத்தெருவில் ஆதரவற்று நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால்தான் மதுவை அளவாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

மது பழக்கம்
மதுவை மருந்து போல் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர கூல்டிரிங்ஸ் போல் குடிக்க கூடாது என்கிறார்கள். இவ்வாறு சொல்லியும் கேட்காமல் அளவுக்கு அதிகமாக குடிக்கும் நபர்களை மருத்துவர்களே போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள். அது போல்தான் குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் ஜியோனா பகுதியில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

20 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை
இங்கு 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு சிகிச்சைக்காக மேஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் சுதார் என்ற 25 வயது இளைஞர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இது சூரத்தில் உள்ளது. இந்த மையத்தை சூரத்தை சேர்ந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி திடீரென உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து உறவினர்கள் கேட்ட போது ஹர்திக் இயற்கையான முறையில் இறந்ததாக கூறியுள்ளனர்.

ரத்த அழுத்தம்
மேலும் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளனர். இதன் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகளும் நடந்தன. எனினும் இவருடைய மரணத்தில் போலீஸாருக்கு சந்தேகம் இருந்தது. அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மறுவாழ்வு மையத்தை ஆய்வும் செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போலீஸாருக்கு ஷாக் சம்பவம் காத்திருந்தது. அப்போதுதான் ஹர்திக் இறந்ததற்கான காரணம் தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி மது குடிக்க முடியாததால் ஹர்திக் தனது கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே மறுவாழ்வு மைய ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை ஏதும் அளிக்காமல் அவரை ஒரு அறையில் போட்டு அடைத்தனர்.

ஹர்திக்
அங்கு ஹர்திக்கின் கை, கால்களை கட்டி போட்டு கயிற்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டுள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பைப்பை கொண்டு தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு அவரை அடித்தே டார்ச்சர் செய்துள்ளனர். மேலும் அதே பிளாஸ்டிக் பைப்பை லைட்டர் நெருப்பில் வாட்டி அதனை ஹர்திக்கின் பிறப்புறுப்பில் ஊற்றியுள்ளனர். இதனால் வலி தாளாமல் அழுதுள்ளார்.

அந்தரங்க உறுப்பில் உருகிய பிளாஸ்டிக்
மேலும் அவரது அந்தரங்க இடத்தில் இருந்த முடிகளையும் நெருப்பால் பொசுக்கியுள்ளனர். இத்தனை கொடுமைகளை செய்துவிட்டு ஹர்திக் இயற்கையாக இறந்தாக பொய் கூறியது போலீஸாருக்கு தெரியவந்தது. அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து போலீஸார் 7 பேரை கைது செய்தனர். மறுவாழ்வு மையத்தில் இப்படி டார்ச்சர் செய்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல் வேறு யாருக்காவது கொடூரங்கள் நடந்துள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மையத்தில் இருந்தவர்களை அவரவர் உறவினர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications