For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடைகள் தளர்வு - சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு விளக்கம் அளித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடை அமைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. அதில் 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.

Liquor shops on highways: Supreme Court norms relaxed

சாலை விபத்துகளால் உயிரிழப்புஏற்படுவதை தடுக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இயங்குவதற்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் 2016, டிசம்பர் 15ல் தீர்ப்பு அளித்தது. அதன்பின் 20 ஆயிரம் மக்கள் தொகை உடைய நகரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 220 மீட்டருக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என கடந்த ஆண்டு மார்ச், 31ல் தீர்ப்பில் திருத்தம் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து வருவாய் இழந்த பல மாநிலங்கள் நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவது மதுக்கடைகளின் நுழைவு வாயிலை மாற்றுவது என, பல முயற்சிகளை மேற்கொண்டன.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் நகர் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை முக்கிய மாவட்ட சாலையாக மாற்றி பஞ்சாபில் ஆளும், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, 'மதுக்கடைகளை அனுமதிக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலையை, ஊரக சாலையாக மாற்றும்அரசின் உத்தரவில் தலையிட முடியாது என, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதை ஏற்கிறோம் என கூறியது.

மாநிலத்தில் இருக்கும் சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக சில திருத்தங்களை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த உத்தரவை பயன்படுத்தி தமிழக அரசு ஏற்கனவே நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டிருந்த 1,700 மதுக்கடைகளை மீண்டும் திறந்தது.

இந்த நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு விளக்கம் அளித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடை அமைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சிப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நகராட்சிகளுக்கு பொருந்தாது என விலக்கு அளிக்கப்பட்டது. சண்டீகருக்கு மட்டும் அல்லாமல் நாடு முழுவதற்கும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பொருந்தும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

English summary
Supreme Court to modify ruling directing removal of all liquor vending outlets along national and state highways.Tamil Nadu's state-run TASMAC has filed an application in the Supreme Court requesting that the 500-metre bar on locating a liquor outlet be reduced to a mere 100 metre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X