ஜம்மு காஷ்மீர்: 521 வாக்குகளில் வெற்றி பெற்ற பாஜகவின் ஒரே பெண் வேட்பாளர் ஷகுன் பரிஹர் யார் தெரியுமா?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவின் ஒரே ஒரு பெண் வேட்பாளரான ஷகுன் பரிஹர் 521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சஜாத் அகமது கிச்லூவைதான் 29 வயது இளம் பெண் ஷகுண் பரிஹர் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஷகுனின் தந்தை மற்றும் உறவினர்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அறிவித்த ஒரே ஒரு பெண் வேட்பாளார் ஷகுன் பரிஹர். வயது 29. அதுவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிஷ்த்வார் சட்டசபை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கியது பாஜக. இத்தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் சஜாத் அகமது கிச்லூ போட்டியிட்டார்.

இன்றைய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியாக ஷகுன் பரிஹர், 521 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஷகுன் பரிஹருடன் சேர்த்து 3 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமது தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷகுண் பரிஹர், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த கிஷ்த்வார் தொகுதி மக்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல்தான் முதன்மையான பிரச்சனை. பயங்கரவாத தாக்குதல்களால் நான் என் தந்தை, உறவினரை இழந்திருக்கிறேன். ஆகையால் இந்த பகுதியில் அமைதிக்காக பாடுபட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களிலும் பாஜக 29, காங்கிரஸ் 6, மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன. இந்த தேர்தலில் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications