மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று திடீரென சந்தித்து பேசியிருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பாஜகவினரைப் போல டெல்லிக்கு எந்த நேரத்திலும் சென்று மத்திய அமைச்சர்களைப் பார்த்து பேசி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட்டோரையும் எளிதில் சந்திக்கின்றனர்.

LS Deputy Speaker Thambidurai meets Defence Minister Nirmala Sitharaman

ஆனால் தமிழக நலனுக்கு விரோதமான திட்டங்களே திணிக்கப்படுகின்றன. ஆகையால் ஆளும் அதிமுக, பாஜகவின் நிழலாக செயல்படுகிறது என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக சசிகலா குடும்பத்தினரை வருமான வரித்துறை வளைத்து பிடித்துள்ளது. அத்துடன் டெல்லிக்கு ஆதரவாக நிலைப்பாடு மேற்கொண்ட போதும் தங்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது ஏன்? என சசிகலா தரப்பு சீறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை லோக்சபா துணை சபாநாயகர் நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தற்போதைய தமிழக நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
LokSabha Deputy Speaker Thambidurai met Defence Minister Nirmala Sitharaman on Tuesday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற