For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் செம ட்ரிக்ஸ்.. பாஜகவைவிட கம்மி ஓட்டு வாங்கியும், ம.பி.யில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிக வாக்குகள் பெற்றும் ம.பி. யில் பின் தங்கிய பாஜக !- வீடியோ

    போபால்: மத்திய பிரதேசத்தில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தாலும்கூட, அங்கு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது பாஜகதான் என்ற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

    கடும் இழுபறி நீடித்த, மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை நிறைவு பெற்றது.

    மொத்தமுள்ள 330 தொகுதிகளில் 114 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள பாஜக 109 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

    ம.பி. சுவாரசியம்

    ம.பி. சுவாரசியம்

    எனவே சுயேச்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக பெற்ற வாக்கு 41.0%.

    காங்கிரஸ் கம்மி

    காங்கிரஸ் கம்மி

    அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 40.9 சதவீதம் மட்டுமே. பாஜக பெற்றுள்ள மொத்த வாக்குகள், 1,56,42980. ஆனால் காங்கிரஸ் அதைவிட குறைவான வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. 1,55,95153 வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது.

    சுயேச்சைகள் அசத்தல்

    சுயேச்சைகள் அசத்தல்

    சுயேச்சைகள் 5.8% வாக்குகளை ஈர்த்துள்ளனர். அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள், 22,18230. பகுஜன் சமாஜ் கட்சி 5.0% வாக்குகளை பெற்றுள்ளது. 19,11642 வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது.

    வாக்கு சதவீதம்

    வாக்கு சதவீதம்

    வாக்கு சதவீதத்தை கொண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் இத்தனை காலமாக குரல் கொடுத்தனர். ஆனால் பாஜக அதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It has been a nerve wrecking exercise in Madhya Pradesh. The equations continued to change with every round of counting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X