For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல் Live Updates: நிறைவடைந்தது வாக்குப்பதிவு

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபை பொதுத் தேர்தல்கள் இன்று அசம்பாவிதங்கள் இன்றி நிறைவடைந்தன. இரு மாநிலங்களிலும், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று, மகாராஷ்டிரா. இங்கு, மொத்தம் 8.9 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 95,473 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்தது. ஆனால், வாக்குப்பதிவு என்னவோ மந்தமாகத்தான் இருந்தது. மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 44.3 சதவீதம் வாக்குப்பதிவுதான் ஆகியிருந்தது. மிஞ்சிப்போனால் 50 சதவீத வாக்குகள்தான் பதிவாகியிருக்கும் என தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரவில் எதிர்பார்க்கலாம்.

ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 1,82,98,714 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 19,425 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாலை 6 மணி நிலவரப்படி ஹரியானாவில் 61.6 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Newest First Oldest First
6:09 PM, 21 Oct

மாலை 6 மணி நிலவரப்படி ஹரியானாவில் 61.6 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது
5:29 PM, 21 Oct

காலை முதல் மாலை வரை மகாராஷ்டிராவில் மந்தமான வாக்குப்பதிவு
5:08 PM, 21 Oct

மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 44.3 சதவீதம் வாக்குப்பதிவு
3:56 PM, 21 Oct

ஹரியானா

ஹரியானாவில் 3 மணி வரை 40.35% வாக்குகள் பதிவாகி உள்ளது
3:55 PM, 21 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 3 மணி வரை 32.33% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
3:02 PM, 21 Oct

ஹரியானா

ஹரியானாவில் 2 மணி வரை 37.12% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
3:02 PM, 21 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 2 மணி வரை 30.75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
2:34 PM, 21 Oct

மகாராஷ்டிரா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மும்பையில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்
2:22 PM, 21 Oct

மகாராஷ்டிரா

பாஜக எம்பி ஹேமாமாலினி மும்பையில் தனது வாக்கினை பதிவு செய்தார்
2:09 PM, 21 Oct

மகாராஷ்டிரா: மும்பையில் அணில் கபூர் மற்றும் ஹிர்த்திக் ரோஷன் வாக்களித்தனர்
2:01 PM, 21 Oct

மகாராஷ்டிரா

மும்பையில் அணில் கபூர் மற்றும் ஹிர்த்திக் ரோஷன் வாக்களித்தனர்
1:39 PM, 21 Oct

ஹரியானா

ஹரியானாவில் 1 மணி வரை 25.09% வாக்குகள் பதிவாகி உள்ளது
1:39 PM, 21 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 1 மணி வரை 17.79% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
1:20 PM, 21 Oct

மஹாராஷ்டிரா

மும்பையில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வாக்களித்தார்
12:52 PM, 21 Oct

மகாராஷ்டிரா

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் பந்த்ரா தொகுதியில் வாக்களித்தனர்
12:49 PM, 21 Oct

மகாராஷ்டிரா

மும்பையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாக்கினை பதிவு செய்தார்
12:10 PM, 21 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூரில் தனது வாக்கினை பதிவு செய்தார்
12:09 PM, 21 Oct

ஹரியானா

மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா ஹரியானாவில் தனது வாக்கினை பதிவு செய்தார்
12:09 PM, 21 Oct

ஒடிசா

100 வயது மூதாட்டி லோச்சனா ஒடிசா மாநிலம் பார்பலியில் வாக்களித்தார்
10:59 AM, 21 Oct

மகாராஷ்டிரா

நடிகை மாதுரி தீட்சித் பந்த்ரா தொகுதியில் வாக்களித்தார்
10:58 AM, 21 Oct

மகாராஷ்டிரா

மழை காரணமாக மகாராஷ்டிராவில் சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு. மக்கள் வாக்களிக்க முடியாமல் தவிப்பு
10:57 AM, 21 Oct

மகாராஷ்டிரா

நடிகர் அமீர் கான் பந்த்ரா தொகுதியில் வாக்களித்தார்
10:56 AM, 21 Oct

மகாராஷ்டிரா

மும்பையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்
10:55 AM, 21 Oct

மகாராஷ்டிரா

காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே சோலாப்பூர் தொகுதியில் வாக்களித்தார்
10:53 AM, 21 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 10 மணி நிலவரப்படி 5.6% வாக்குகள் பதிவாகி உள்ளது
10:27 AM, 21 Oct

மகாராஷ்டிரா

டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது மனைவியுடன் மும்பையில் வாக்களித்தார்
10:24 AM, 21 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்
10:23 AM, 21 Oct

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர முதல்வர் மனோகர் லால் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார்
9:53 AM, 21 Oct

ஹரியானா

ஹரியானாவில் காலை 9 மணி நிலவரப்படி 4.18% வாக்குகள் பதிவாகி உள்ளது
9:51 AM, 21 Oct

மகாராஷ்டிரா

காலை 9 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 1.8% வாக்குகள் பதிவாகி உள்ளது
READ MORE

Maharashtra, Haryana election polling 2019 Live Updates: BJP vs Congress fights for 2 states
English summary
Maharashtra, Haryana election polling 2019 Live Updates: The BJP and the Congress fights each other in Haryana and in Maharashtra in the October 21 Assembly elections. Voting is scheduled to begin at 7 am at all polling booths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X