Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபர்ணாவுக்கு "நூல்" விடுகிறதா பாஜக.. மெயின்புரி "மருமகள்" பாலிட்டிக்ஸ்?.. டிம்பிள் இன்று வேட்பு மனு

மெயின்புரி தொகுதியில் டிம்பிள் யாதவ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: முலாயம்சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான, டிம்பிள் யாதவ் இன்று மெயின்புரி எம்பி தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை, எந்த தேர்தல் என்றாலும், பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கி பட்டையை கிளப்பிவிடும்.

கடந்த முறை உபியில் தேர்தலின்போது, பாஜகவை சேர்ந்த சிலர் சமாஜ்வாதி கட்சிக்கு மாறியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.. வழக்கமாக, மாற்று கட்சியில் உள்ளவர்களை தன் பக்கம் இழுப்பதும், அதுவும் கடைசி நேரத்தில் இப்படியான வியூகத்தை கையில் எடுப்பது பெரும்பாலும் பாஜகதான்.

 மாமனார் மருமகள்

மாமனார் மருமகள்

ஆனால், திடீரென சமாஜ்வாதி முந்திக்கொண்டுவிடவும், பாஜகவுக்கு இதன் மூலம் சரிவு ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினரை வளைத்து போட்டு பதிலடி தந்தது பாஜக.. அதன்படி, முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் சகோதரரான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவை கட்சிக்குள் இழுத்து கொண்டது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதற்கும் பாஜக தீவிரமான முனைப்பை காட்டி வருகிறது..

 டோட்டல் காலி

டோட்டல் காலி

இதனிடையே, மெயின்புரி தொகுதி எம்பி பதவி வகித்து வந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் 10-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் அவரது தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கும், 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மெயின்புரி எம்பி தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

 மாமனார் + மருமகள்

மாமனார் + மருமகள்

அவர் தனது வேட்பு மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்ய போவதாக, மெயின்புரி மாவட்ட சமாஜ்வாடி கட்சித்தலைவர் அலோக் ஷாக்யா நேற்றைய தினம் கூறியிருந்தார்.. முலாயம் சிங் யாதவின் பாரம்பரியத்தை அங்கு தொடருகிற விதத்தில், அவரது மருமகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. கடந்த 2019 தேர்தலில் இதே தொகுதியில், முலாயம் சிங் யாதவ், தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யாவை, 94,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்...

 பிராமணர்கள்

பிராமணர்கள்

இதற்கு காரணம், இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 12.13 லட்சம் வாக்காளர்களில் 35 சதவீதத்தினர் யாதவ் சமூகத்தினர் என்கிறார்கள்.. மற்றவர்கள் ஷாக்யா, தாக்குர், பிராமணர்கள், தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்றோர் உள்ளனர்.. இந்த தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவபால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாடி லோகியா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனவா, இல்லையா என்பது பற்றி தகவல் இதுவரையில்லை.. டிம்பிள் யாதவ்வை பொறுத்தவரை, கடந்த முறை கன்னாஜ் எம்பி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சுப்ரத் பதக்கிடம் தோல்வி அடைந்தவர்..

 வானம் பூமி

வானம் பூமி

இப்போது மாமனார் தொகுதியிலேயே நிறுத்தப்பட உள்ளதால், நிச்சயம் அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்கிறார்கள்.. டிம்பிள் யாதவ், முலாயம் சிங் யாதவுக்கு ஈடானவர் கிடையாதுதான், முலாயம் சிங் யாதவ் வானம் என்றால், டிம்பிள் யாதவ் பூமி... அதனால், இங்கு பாஜகவே வெற்றி பெறும் என மாநில பாஜக அமைச்சர் ஜெய்வீர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. இருந்தாலும், பாஜக இன்னும் இந்த தொகுதிக்கு வேட்பாளர் யாரையும் முடிவு செய்யவில்லை..

 மருமகள் + மருமகள்

மருமகள் + மருமகள்

அநேகமாக, முலாயம் சிங் யாதவின் இன்னொரு மருமகளான அபர்ணாவை, பாஜக நிறுத்தக்கூடும் என்று யூகங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.. இதற்கு அபர்ணா ஒப்புக் கொள்வாரா? என தெரியவில்லை.. டிம்பிளை எதிர்த்து போட்டியிட வைக்க, அபர்ணாவை பாஜக நிறுத்தக்கூடும் என்கிறார்கள்.. அதாவது ஒரே வீட்டில் 2 மருமகள்கள், இருவேறு களத்தில் நிற்கவைத்து, பாஜக தன் வேலையை காட்டும் என தெரிகிறது.. டிம்பிள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், பாஜக இவரை எதிர்த்து யாரை நிறுத்த போகிறது என்ற ஆர்வம்தான் திணறடித்துக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+