நீங்க மேற்கு வங்கத்திற்கு குறி வச்சா, நாங்க என்னசெய்வோம் தெரியுமா? பாஜகவுக்கு மமதா எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மேற்கு வங்கம் பக்கம் எட்டி பார்த்துவிடாதீர்கள்- வீடியோ

  கொல்கத்தா: மேற்கு வங்கம் பக்கம் எட்டி பார்த்துவிடாதீர்கள், தக்க பதிலடி கிடைக்கும் என்று பாஜகவுக்கு, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

  பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகளான சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்டவை கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன.

  இதையடுத்து காங்கிரசை தவிர்த்து தனது தலைமையில் பாஜகவுக்கு எதிராக அணி அமைக்க மமதா முயன்று வருகிறார். சில தினங்கள் முன்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி மமதா பேசியிருந்தார்.

  மமதா உரை

  மமதா உரை

  இந்த நிலையில், மகளிர் தினமான நேற்று, கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில், மமதா பானர்ஜி பேசியதாவது: தெலுங்கு தேசமும் இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. சிவசேனாவும், தெலுங்கு தேசமும், கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. இப்போதாவது அந்த கட்சிகள் கோரிக்கையை காது கொடுத்து கேட்பார்களா?

  டெல்லியை வெல்வோம்

  டெல்லியை வெல்வோம்

  உத்தரபிரதேசம், மத்திய பிரதசேம், கர்நாடகா என்ன சொல்கிறது என்பதை உங்களால் கேட்கிறதா? மேற்கு வங்கத்தை எட்டிக் கூட பார்த்துவிடாதீர்கள். மேற்கு வங்கம் உங்களுக்கு தக்க பதிலடியை கொடுக்கும். மேற்கு வங்கம் பற்றி இப்போதெல்லாம் அவர்கள் கனவு காண்கிறார்கள். ஆனால், அது நடக்காது. அது அவ்வளவு எளிதானது கிடையாது. அதற்கு பதிலாக, டெல்லியை மேற்கு வங்கம் வெல்லும். மேற்கு வங்கத்தை பற்றி இன்னும் உங்களுக்கு புபரியவில்லை.

  பதிலடி

  பதிலடி

  நீங்கள் மேற்கு வங்கத்தை குறி வைத்தால், மேற்கு வங்கம், டெல்லி செங்கோட்டையை குறி வைக்கும். மேற்கு வங்கம் தனது மாநில நலனுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மொத்த நாட்டுக்காகவும் முன்னெடுக்கிறது. இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.

  பிற கட்சிகளுடன் உறவு

  பிற கட்சிகளுடன் உறவு

  மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சியினருடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் மமதா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூட்டணி பற்றி பேசி வருகிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  "If you target Bengal, Bengal shall aim at the Red Fort in Delhi. Remember, Bengal is not just working for itself but the entire country," Banerjee warned.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற