For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சிங்கிளாக".. பாஜகவுக்கு தண்ணி காட்டும் மம்தா.. "தீதி"யின் தில் போராட்டம்.. அதிரும் கொல்கத்தா!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போராட்டம் செய்து வருகிறார்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில், காந்தி சிலை முன்பு மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில், இந்த நாடே மம்தாவின் மறியலை உற்று நோக்கி வருகிறது.

இந்தியாவின் பெண் அரசியல்வாதிகளிலேயே ஜெயலலிதாவுக்கு பிறகு அதிரடிக்கு பெயர் போனவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான்.. அது பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி, இவருக்கு எல்லாருமே ஒன்றுதான்...

அரசியலில் தீதி எந்த ஒரு அடியை எடுத்து வைத்தாலும், அது சரியான விகிதத்தில் அதேசமயம், அடுத்தவர் அலறி துடிக்கும் அளவுக்கு நுட்பமாக இருக்கும்... பேரிடியாக இருக்கும்..

 இசை ரசிகை

இசை ரசிகை

அதே நேரத்தில் இவரது இன்னொரு பரிமாணம் பிரம்மிக்கத்தக்கது.. இவர் ஒரு தீவிரமான கலாப்பிரியை... இசை ரசிகை... விளையாட்டு ஆர்வம் நிறைந்தவர்... நன்றாக கவிதை எழுதுவார்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக அன்பாவனரும்கூட... இத்தனை திறமைகள் இருந்தாலும்கூட, இத்தனை வருட வங்கத்து அரசியலை தனி ஒரு நபராக தூக்கி நிறுத்தி வந்தாலும்கூட.. மம்தாவிடம் அனைவருமே பார்த்து ஆச்சரியப்படுவது அவரது எளிமைதான்...

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

மம்தா என்றாலே டக்கென நம் முன்வந்து நிற்பது அந்த குட்டியான கொண்டையும், வெள்ளை கலர் டிரஸ்ஸும்தான்.. இவர் எந்த அளவுக்கு எளிமை என்றால், ஒன்றரை வருடத்துக்கு முன்பு முகேஷ் அம்பானி வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது.. அந்த கல்யாணத்தில் உலக பணக்காரர்கள் முதல் உள்ளூர் தொழிலதிபர்கள் வரை ரிச் ஆக நுழைந்தநிலையில், அப்போதும் இதே சிம்பிளிசிட்டியோடு உள்ளே நுழைந்த மம்தாவை அன்று இந்தியாவே ஆச்சரியமாக பார்த்ததை இங்கு பதிவு செய்ய வேண்டி உள்ளது.

 பரபரப்பு

பரபரப்பு

இப்போது இந்த பேச்செல்லாம் எதற்காக என்றால், மேற்கு வங்க தேர்தல் தினந்தோறும் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. எங்கோ அதல பாதாளத்தில் பாஜக அங்கு இத்தனை காலம் தொங்கி கொண்டிருந்தது.. ஆனால், தன் பாணி அரசியலை வேறு மாதிரியாக கையில் எடுத்துள்ளது.. பாஜகவின் சமீபத்திய காய் நகர்த்தலை கண்டு மம்தா கொஞ்சம் ஆடித்தான் போயுள்ளார் என்றாலும், தன் நம்பிக்கையை விடவில்லை. இன்று ஒரு தர்ணா நடத்தி கொண்டிருக்கிறார்.. 24 மணி நேர தர்ணாவில் உட்கார்ந்துள்ளார்.

 பாதுகாப்பு படை

பாதுகாப்பு படை

இந்த முறை தேர்தலை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் பாஜக ஸ்கெட்ச் போட்டு வரும் நிலையில், இந்த ஒரு நாள் தர்ணாவிலும் கூல் தீதியாகவே உட்கார்ந்துள்ளார் மம்தா.. கடந்த ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில் நடந்த பிரச்சாரத்தின்போது, மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் மம்தா மீது ஒரு புகார் தரப்பட்டது.. அந்த புகாருக்கு தன் தரப்பு விளக்கத்தை மம்தா அளித்தும், தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை.. அதனால், 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது..

தர்ணா

தர்ணா

ஒரு மாநில முதல்வருக்கே பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை.. இது வேறு எங்குமே நடக்காத சம்பவம்.. அதனால்தான் மம்தா 12 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவின் ஒவ்வொரு தந்திரத்தையும் மம்தா முறியடித்து வருகிறார் என்றாலும், இந்த தர்ணாவில் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.. ரொம்பவே கூல் ஆக இருக்கிறார்.. வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு, ஹாயாக டிராயிங் செய்து கொண்டிருக்கிறார்..

டிராயிங்

டிராயிங்

ஒரு வெள்ளை கலர் பேப்பரில், பென்சில் வைத்து வரைந்து கொண்டிருக்கிறார்.. யானை, பூக்கள் என படம் வரைந்து, அந்த படத்துக்கு ஸ்கெட்ச் பென்சில்களை வைத்து கலர் தந்துள்ளார்.. குட்டி குட்டி டிராயிங் என்றாலும், பார்க்க அழகாக இருக்கிறது.. பொதுவாக படம் வரைவதாக இருந்தால், அதற்கு சரியான மனநிலைமை வேண்டும்.. ஓரளவாவது கவனம் செலுத்தி வரைய வேண்டும்..

 சிங்கிள் லேடி

சிங்கிள் லேடி

மம்தா வரைந்த டிராயிங்கை பார்த்தால், தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அதிகமாக தெரிகிறது. அத்துடன், நேரத்தை வீணாக்க கூடாது என்பதையும் மம்தா உணர்த்தி காட்டியுள்ளார்.. அவரை சுற்றி யாருமே இல்லை என்றாலும், மாஸ்க் அணிந்துள்ளார்.. கோல்கட்டாவில் உள்ள காந்தி சிலை முன்பு உள்ள மம்தாவை பார்த்தால் போராட்டம் செய்வது போலவே தெரியவில்லை.. சிங்கிள் லேடியாக பாஜகவுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது..!

English summary
#MamataBanerjee holds sit in protest in Kolkatta
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X