அற்பனுக்கு வாழ்வு வந்தா மொமண்ட்.. குதிரை ஊர்வலம், பேண்ட் வாத்தியங்களோடு ஐபோன் வாங்க சென்ற நபர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அற்பனுக்கு வாழ்வு வந்தா மொமண்ட்-வீடியோ

  தானே: மஹாராஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்த நபர் ஒருவர் ஐஃபோன் எக்ஸ் வாங்குவதற்காக பெரிய அளவில் கல்யாண ஊர்வலம் ஒன்றை நடத்தி இருக்கிறார். மகேஷ் பள்ளிவால் என்ற இந்த நபர் தானேவில் முதன் முதன்முதலாக ஐஃபோன் எக்ஸ் வாங்கிய நபர் ஆவார்.

  இவர் அங்கு இருந்த ஐஃபோன் ஸ்டோரில் புதிய ஐஃபோன் எக்ஸ் வாங்க செல்வதற்காக கல்யாண ஊர்வலம் போல குதிரை, பேண்ட் வாத்தியம் என பெரிய பரிவாரங்களுடன் சென்று இருக்கிறார்.

  மேலும் அவர் தனக்கும் ஐஃபோன்க்கும் இருக்கும் காதல் குறித்தும் காமெடியாக பேசி இருக்கிறார். இவர் இப்போது ஒரேநாளில் வைரல் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   ஐஃபோன் எக்ஸ்

  ஐஃபோன் எக்ஸ்

  ஐஃபோன் நிறுவனத்தின் புதிய மாடலான ஐஃபோன் எக்ஸ் தற்போது இந்திய சந்தைகளில் அறிமுகம் ஆகி இருக்கிறது. இந்தியா முழுக்க இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது இணையத்தில் இதற்கான புக்கிங்கை தொடங்கிய சில நிமிடத்தில் அனைத்தும் போன்களும் புக் செய்யப்பட்டு விட்டது. இந்தியாவில் ஐஃபோன் எக்ஸ் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

   ஐ லவ் ஐஃபோன்

  ஐ லவ் ஐஃபோன்

  இந்த நிலையில் ஐஃபோன் எக்ஸ் மாடலை வாங்குவதற்காக மஹாராஷ்டிர மாநிலம் தானேவை சேர்ந்த மகேஷ் பள்ளிவால் என்ற நபர் வித்தியாசமான செயல் ஒன்றில் ஈடுபட்டு இருக்கிறார். அதன்படி அவர் தானேவில் இருக்கும் ஐஃபோன் ஸ்டோரில் புதிய ஐஃபோன் எக்ஸ் வாங்க செல்வதற்காக கல்யாண ஊர்வலம் போல குதிரை, பேண்ட் வாத்தியங்கள் என பெரிய பரிவாரங்களுடன் சென்று இருக்கிறார். மேலும் தனது கையில் 'ஐ லவ் ஐஃபோன்' என்று எழுதி இருக்கும் கட் அவுட் ஒன்றையும் வைத்து இருக்கிறார்.

   ஒரே நாளில் வைரல் ஆனார்

  ஒரே நாளில் வைரல் ஆனார்

  இதையடுத்து அவர் ஒரே நாளில் இணையத்தில் வைரல் ஆனார். இது குறித்து அவர் தெரிவிக்கும் போது ''எனக்கும் ஐஃபோனுக்கும் நீண்ட கால பந்தம் இருக்கிறது. நான் ஐஃபோனை காதலிக்கிறேன். அதான் இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டி ஐஃபோன் வாங்க செல்கிறேன்." என்கிறார். இவரை குறித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

  ஐஃபோன் கிடைத்தது

  இந்த நிலையில் பெரும்பாலான ஆப்பிள் ஸ்டோர்களில் ஐஃபோன் எக்ஸ் மாடல் கிடைக்காத நிலையில் அவர் சென்ற, தானே ஆப்பிள் ஸ்டோரில் அதிர்ஷ்டவசமாக ஐஃபோன் எக்ஸ் மாடல் இருந்தது. 84,000 ரூபாய் மற்றும் 1,20,000 ரூபாய் ஆகிய விலையில் கிடைக்கும். இரண்டு மாடல்களில் அவர் 1,20,000 ரூபாய் ஐஃபோன் எக்ஸை வாங்கினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A man in Thane did a marriage rally for buying I phone X. Mahesh Paliwal was seen riding a horse to collect his new iPhone X and he got viral in social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X