For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் மண்சரிவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு.. 50 பேர் கதி என்ன?

மணிப்பூர் நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் மாயமாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது... இதில் 15 பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.. ஆனால், 20 பேர் சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகிய உள்ள நிலையில், அவர்களை தேடும் பணியும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Manipur Land Slide | மண்ணில் புதையுண்ட 80 பேர் , மீட்க முடியாத அவலம் #India

    மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே, இந்திய ராணுவ 107 டெரிடோரியல் ஆர்மியின் முகாம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது... மணிப்பூரில் ஜிரிபாமில் இருந்து இம்பால் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

     திடீர் மண்சரிவு

    திடீர் மண்சரிவு

    இந்நிலையில், பாதுகாப்பிற்காக மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான், இந்த திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.. மண்ணோடு மண்ணாக 50 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய்விட்டனர்.. பலர் உயிருடன் புதைந்து போனார்கள்.. இதனையடுத்து மீட்பு பணிகள் ஆரம்பமாயின..

    படுகாயம்

    படுகாயம்

    காயமடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, நோனி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்... மேலும் படுகாயமடைந்தவர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.. குழந்தைகள் ஆற்றின் அருகே செல்லாமல் பார்த்து கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், நோனி துணை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

     மண்சரிவு

    மண்சரிவு

    இந்த திடீர் மண்சரிவு குறித்து, மணிப்பூர் முதல்வர் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.. மண்சரிவு நிலைமையை மதிப்பிடுவதற்காகவும் நேற்றைய தினம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. தேடுதல் மற்றும் மீட்பு பணி ஏற்கனவே நடந்து வருகிறது. அவர்களை இன்று நமது பிரார்த்தனையில் வைப்போம். அறுவை சிகிச்சைக்கு உதவ டாக்டர்களும் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

    அமித்ஷா

    அமித்ஷா

    முன்னதாக, மணிப்பூர் முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசி, நிலவரம் குறித்து விசாரித்தார்.. பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூரில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்னாவிடம் பேசினேன். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ராணுவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது..மேலும் இரண்டு குழுக்கள் செல்கின்றன என்று அமித்ஷா பதிவிட்டிருந்தார்.

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 பேர் ராணுவ வீரர்கள். ஆனால் 20 பேரின் சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது... ஆனால், புதிய நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது... வானிலை சீராகும் வரை ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிந்துள்ளது.. மீட்பு பணியில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருவதால், பதற்றமும் அங்கு அதிகரித்துள்ளது.

    English summary
    manipur landslide toll now at 20 rescue and 50 missing, operations going on மணிப்பூர் நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் மாயமாகி உள்ளனர்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X