For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதத்தை வியாபாரமாக்கிய மிஷினரிகள்: மதமாற்றம் எப்படி நடக்கிறது? நிதி வருவது எப்படி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஆக்ராவில் முஸ்லிம்கள் 200 பேர், இந்துக்களாக மதம் மாறியுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மதமாற்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் சத்தமே இல்லாமல் நடத்திவரும் மதமாற்றம் குறித்து உளவுத்துறை அளித்துள்ள விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

"ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா.

Marketing Religion in India: Who does it, how they do it?

மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை. அது கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

வெளியே தெரிவதைவிட மிக கடுமையாக மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்றுவருவதை அப்புள்ளி விவரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படை தேவைகளுக்காக கஷ்டப்படுவோர்கள்தான் மிஷினரிகளின் முதல் டார்கெட். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதம் மாற்ற முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷினரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

Cutting Edge International and the CoFounder of Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர், டாக்டர். ஜேம்ஸ் ஓ டேவிஸ் கூறுகையில், "இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்" என்கிறார். இரு குழந்தைகள் முறையை பின்பற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் எப்படி இப்படி பல்கி பெருகியுள்ளன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

ஜேம்ஸ் ஓ டேவிஸ் நடத்திவரும் அமைப்பு மேலும் 2 ஆயிரம் கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் சர்ச்சுகளை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாம்.

நிதி பெறுவது யார்?

கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளன. இந்தியாவில்.. அதிலும் தமிழகத்திலுள்ள என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகள், மக்களை மதம்மாற்ற வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக நிதி பெறுவது அதில் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் இந்திய என்ஜிஓக்களுக்கு வருகிறது. மதம் மாற்றுவது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம்.

உள்துறை அமைச்சக தகவல்படி, கன்னியாகுமரியை சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association(TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்ஜிஓக்கள் அதிகம் நிதி உதவி பெற்றுள்ளன.

இந்த என்ஜிஓக்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிகப்படியான நிதி வந்துள்ளதும் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. ரூ.44.16 கோடி, ரூ.20.60 கோடி, ரூ.10.30 கோடி, 5.15 கோடி, ரூ.3.22 கோடி என பல கட்டங்களாக இவ்வமைப்புகளுக்கு நிதி வந்துள்ளது.

இந்த நிதியை ஏன் பெறுகிறார்கள் என்று சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை சுகாதார முகாம்கள், அநாதைகள் நல திட்டங்கள், மத போதகர்களுக்கான சம்பளம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாதக தெரிவித்துள்ளன.

மார்க்கெட்டிங்!

மதமாற்றம் என்பது மார்க்கெட்டிங் போல மாற்றப்பட்டுள்ளது. பிரபல மதபோதகர் பென்னிஹின் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து கூட்டம் நடத்தியபோது இந்து அமைப்புகள் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆயினும் அவரது கூட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்திருந்தது. அக்கூட்டத்தில் பென்னி ஹின் மைக்கேல் ஜாக்ஷனை போலத்தான் மேடையில் என்ட்ரி ஆனார். ராக் பாடல்கள் காதை கிழித்தன.

அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் 'ஆசீர்வதித்ததும்' எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்..? என்ற கேள்வியின் பின்னால்தான் மார்க்கெட்டிங் டெக்னிக் ஒளிந்துள்ளது.

English summary
As the debate on religious conversions rages on let us take a look at where the exact problem lies and how religion has become such a marketing stunt that the number of conversions in India rose from 24 million in 2000 to 71 million in 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X