மீரட்: ராணுவ முகாமில் அதிகாரிகள் திடீர் மோதல், அடிதடி - 2 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
மீரட்: மீரட்டில் உள்ள ராணுவ முகாமில், ராணுவத் தலைமைத் தளபதி பிரிவு மற்றும் சீக்கிய பிரிவு அதிகாரிகளிடையே, திடீரென அடிதடி மோதல் வெடித்தது. இதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கும், சீக்கிய லைட் இன்பேன்டரி பிரிவு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஒரு குத்துச் சண்டைப் போட்டியைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது.
இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் 2வது நிலை அதிகாரி உள்பட 2 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒரு ஜவானும் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ராணுவத் தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications