For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீரா குமார் சொல்லி வாயை மூடவில்லை.. தூவிட்டாங்கய்யா பொடியை!

Google Oneindia Tamil News

Meira Kumar's joke almost came true in House
டெல்லி: லோக்சபா சபாநாயகர் மீரா குமார் நேற்று முன்தினம் இரவு எம்.பிக்களுக்குக் கொடுத்த விருந்தின்போது, நாளைய கூட்டத்தில் யாரைத் தூக்கி சிலுவையில் அறையப் போகிறார்களோ என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். கடைசியில் அவர் சொன்னபடியே நடந்து விட்டது... மிளகுப் பொடியைத் தூவி நாடாளுமன்றத்தையே பதைபதைக்க வைத்து விட்டனர்.

புதன்கிழமையன்று எம்.பிக்களுக்கு விருந்து கொடுத்தார் மீரா குமார். அதில் வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகரும் கலந்து கொண்டார். இந்த விருந்தின்போது கலை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.

அப்போது ஒரு எம்.பி, இதுதான் கடைசி விருந்தா என்று மீரா குமாரிடம் கேட்க, அதற்கு மீரா குமார், அப்படியெல்லாம் இல்லை. நாளை யாரைத் தூக்கி சிலுவையில் அறையப் போகிறார்களோ என்று லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தெலுங்கானா மசோதாவை மனதில் வைத்து நகைச்சுவையாகப் பதிலளித்தார் மீரா குமார்.

கடைசியில் அவர் சொன்னபடிதான் நடந்தது. நேற்று நாடாளுமன்றம் போர்க்களமானது. தெலுங்கு தேச உறுப்பினர் வேணுகோபால் ரெட்டி அவையின் மையப் பகுதியில் வந்து அமர்க்களம் செய்து விட்டார். ஆனால் பிற்பகலில்தான் மற்ற கூத்துக்கள் அரங்கேறின.

மைக்கைப் பிடுங்கி வீசினர். காங்கிரஸ் எம்.பிக்களுடன், தெலுங்கு தேச எம்.பிக்கள் மோதலில் இறங்கினர். சபாநாயகர் இருக்கை முன்பு கிட்டத்தட்ட ஒரு போரே நடந்தது. உச்சகட்டமாக காங்கிரஸ் எம்.பி லகடபதி ராஜகோபால் கையோடு கொண்டிருந்த மிளகுத் தூளை எடுத்து ஸ்பிரே செய்ய அது பூனம் பிரபாகர் கண்ணில் பட்டு அவரை அலறடித்தது.

இந்தப் பொடி சுஷ்மா சுவராஜ் மீ்தும் பட்டு அவர் தும்மத் தொடங்கினார். மேலும் தனது முகத்தையும் அவர் கர்ச்சீப்பால் மூடிக் கொண்டார். அந்தப் பொடியின் நெடி, மேலே இருந்த பத்திரிக்கையாளர் பகுிதி வரை பரவியது. இதையடுத்து அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து வேகமாக வெ்ளியேறினர்.

English summary
"Is this the last supper?" an MP asked Lok Sabha Speaker Meira Kumar as a dinner engagement for parliamentarians came to an end on Wednesday evening. "I don't know who will be crucified tomorrow," Kumar shot back, only half in jest as the dinner in honour of her Bangladeshi counterpart wound up with a cultural programme that saw MPs joining garbha dancers on stage. Even before the Lok Sabha clock hands moved to 11 am on Thursday, TDP's Venugopal Reddy began jostling and shoving in the well of the House, proving the Speaker's apprehensions to be well founded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X