Joshimath sinking:ஜோஷிமத் நகரம் திடீரென புதைய என்ன காரணம்? 1976-ம் ஆண்டே எச்சரித்த மிஸ்ரா கமிஷன்
டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் புதைந்துக் கொண்டிருக்கும் நிலையில், 1976-ம் ஆண்டே இதுகுறித்து ஒரு கமிஷன் எச்சரிக்கை விடுத்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இன்று நடக்கும் அனைத்தையும் கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிஷன் ரிப்போர்ட் புட்டு புட்டு வைத்துள்ளது. ஆனால், அரசாங்கங்கள் இதை அலட்சியப்படுத்தியதன் விளைவே தற்போது ஜோஷிமத் அழிவுக்கு காரணம் என புவியியல் விஞ்ஞானிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு நகரத்தின் அழிவை பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஓர் அறிக்கையை அரசாங்கங்கள் இந்த அளவுக்கு அலட்சியம் செய்ய என்ன காரணம் என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியறுத்துகின்றனர்.

புதையும் ஜோஷிமத் நகரம்
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர நகரமான ஜோஷிமத் இன்று சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. சுமார் 15 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வசித்து வரும் ஜோஷிமத் நகரம் மோசமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கிறது. எனவே இங்கு அடிக்கடி நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் ஏற்படுவது சஜகம். இந்நிலையில்தான், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில நாட்களாக ஜோஷிமத் பகுதியில் அடுத்தடுத்து பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன.

1976-ம் ஆண்டே எச்சரித்த மிஸ்ரா கமிஷன்
தற்போது ஜோஷிமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளும், சாலைகளும் புதைந்துள்ளன. இதனால் மரண பயத்தில் இருக்கும் ஜோஷிமத் மக்களை மீட்கும் பணியில் உத்தராகண்ட் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, 1976-ம் ஆண்டிலேயே ஜோஷிமத் நகரம் எதிர்காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை புட்டு புட்டு வைத்த மிஸ்ரா கமிஷன் அறிக்கை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த அறிக்கையில், ஜோஷிமத் நகரில் வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற வேண்டும்; என்னென்ன திட்டங்களை செயல்படுத்தக் கூடாது; எந்த இடங்களில் வீடுகளை அனுமதிக்கக் கூடாது என்பன போன்ற எச்சரிக்கைகளை அந்த கமிஷன் தெரிவித்திருக்கிறது.

என்னென்ன அறிவறுத்தல்கள்?
மிஸ்ரா கமிஷன் அறிக்கையில், உத்தராகண்ட் மாநிலமே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் மண்டலத்தில் அமைந்திருக்கும் போது, ஜோஷிமத் நகரம் அந்த அபாயத்தின் மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மலையின் சரிவின் நடுப்பகுதியில் ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பதால் இங்கு அடுக்குமாடி வீடுகள் கட்டப்படக் கூடாது என்றும், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நகரை சுற்றி 3-க்கும் மேற்பட்ட ஆறுகள் ஓடுவதால் மண் அரிப்பு இயற்கையிலேயே அதிகம் இருக்கும் எனத் தெரிவித்துள்ள மிஸ்ரா கமிஷன், வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மண்ணை தோண்டும் வகையிலான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அலட்சியப்படுத்திய அரசுகள்
ஆனால், மிஸ்ரா கமிஷனின் அறிக்கையை அப்போதைய மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் (உபியின் ஒருபகுதியாக இருந்தது உத்தராகண்ட்) கிடப்பில் போட்டது. அதற்கு பிறகு அமைந்த அடுத்தடுத்த அரசுகளும் இதை சட்டை செய்யவில்லை. மாறாக, அந்த அறிக்கையில் என்னென்ன செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டதோ அவை அனைத்தும் ஜோஷிமத் நகரில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சரிவாக இடத்தில் அதிக அளவிலான அடுக்குமாடி வீடுகளை கட்ட அனுமதித்ததால் நிலத்தில் இருக்கும் மணல்கள் வலுவிழக்க தொடங்கின. பல நீர்மின் திட்டங்களை செயல்படுத்தியதால் மண் அரிப்பு அதிகமானது. மேலும், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளில் நீர்ப்பிடிப்பு சக்தியும் குறைந்தது. அதுமட்டுமல்லாமல், முறையாக பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்தததால் நிலத்திற்கு மேலே நீர் கசியும் பிரச்சினையும் உருவானது. இதுபோன்ற பல காரணங்களால், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, ஜோஷிமத்த்தை தாங்கும் நிலம் வலுவிலக்க தொடங்கி சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து போக ஆரம்பித்துள்ளன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications