பலாத்காரம் செய்யத் தூண்டும் ஹேட் ஸ்டோரி 2 படத்திற்கு தடை விதியுங்கள்: கர்நாடக எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஹேட் ஸ்டோரி 2 என்ற பாலிவுட் படத்தை பார்க்கும் குறுக்கு புத்தி உள்ளவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடக்கூடும். அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி. தத்தா தெரிவித்துள்ளார்.

விஷால் பாண்டியா இயக்கத்தில் சுர்வீன் சாவ்லா, ஜெய் பானுஷாலி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி படம் ஹேட் ஸ்டோரி 2. முன்னதாக 2012ம் ஆண்டில் பவோலி தாம் மற்றும் குல்ஷன் நடிப்பில் வெளியான ஹேட் ஸ்டோரியின் இரண்டாம் பாகம் தான் இந்த படம்.

படத்தில் படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி காட்சிகள் தாராளமாக உள்ளன.

பலாத்காரம்

பலாத்காரம்

ஹேட் ஸ்டோரி 2 படத்தில் பல ஆபாச காட்சிகள் உள்ளன. அவற்றை பார்க்கும் குறுகிய புத்தி உள்ளவர்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்யக்கூடும் என்று மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா கர்நாடக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

தடை

தடை

ஹேட் ஸ்டோரி 2 படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

ஹேட் ஸ்டோரி 2 படத்தை பார்த்துவிட்டு அறிக்கை அளிக்குமாறு உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்சார்

சென்சார்

ஹேட் ஸ்டோரி 2-ன் ட்ரெய்லர் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரத்திற்காக படுக்கையறை காட்சிகளை ஒளிபரப்ப சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுர்வீன்

சுர்வீன்

ஹேட் ஸ்டோரி படத்தில் சுர்வீன் சாவ்லா ஓவர் கவர்ச்சி காட்டியதை பார்த்து அவரது பெற்றோர்களே அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+