For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டு செய்யுற வேலை.. வதோதரா 'ராஜ்மாதா'வையும் மனுத்தாக்கலுக்கு அழைத்து சென்ற மோடி!!

By Mathi
|

வதோதரா: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தபோதும் அப்பகுதி அரச குடும்பத்துக்கு முக்கியத்துவம்.. அதன் பின்னர் பேசிய போதும் அரச குடும்பத்துக்கு அப்படி ஒரு வானளாவ புகழாரம் சூட்டி பேசி 'ஐஸ்' வைத்தார்..

வதோதராவில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த மோடியை முன்மொழிந்தவர்கள் 5 பேர். இவர்களில் ஒருவர் டீக்கடைக்காரர். மற்றொருவர் வதோதரா அரச குடும்பத்தைச் சேர்ந்த 'ராஜமாதா' சுபங்கினிதேவி ராஜே கெய்க்வாட்.

Modi hails Vadodara's royal family

அத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு அங்கு பேசிய மோடி கெய்க்ட்வாட் அரச பரம்பரைக்கு புகழாரம் சூட்டினார். கெய்க்வாட் அரச பரம்பரை கட்டிய ஆரம்ப பள்ளியில்தான் நான் படித்தேன். சாயாஜிராவ் கெய்க்வாட் எழுதிய புத்தியகம் இன்றளவும் ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் இருப்போருக்கு உந்து சக்தியாக இருக்கும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்ஸ் பணிகளில் சேரும் புதிய அதிகாரிகளிம் அவர் எழுதிய புத்தகத்தைத்தான் படிக்கச் சொல்வேன் என்று ஆஹா ஓஹோவென புகழாரம் சூட்டிப் பேசினார் மோடி.

என்னதான் மன்னர் பரம்பரை ஒழிந்தாலும் குஜராத்தின் பல மாவட்டங்களில் இன்னமும் மன்னர்கள் மீதான மதிப்பு இருக்கிறது. அவர்களுக்கான முதல் மரியாதையும் இருந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மோடியும் அவர்களிடம் ஆதரவை நம்பித்தான் களமிறங்க வேண்டியிருக்கிறது..

எல்லாம் ஓட்டு செய்யுற வேலை பாஸ்!

English summary
A local tea vendor from Vadodara along with Shubhanginidevi Raje-Gaekwad, a member of Vadodara’s royal Gaekwad family also signed Modi’s nomination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X