For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நண்பர்களுக்கு தேவையானதை 10 மாதங்களுக்கு முன்பே செய்து விட்டார் மோடி: மாயாவதி சாடல்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி தனது நண்பர்களுக்குத் தேவையான உதவிகளை 10 மாதங்ளுக்கு முன்பே செய்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். மோடியின் செல்லாது ரூபாய் ந

Google Oneindia Tamil News

லக்னோ: கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி பிரதமர் மோடி தனது நண்பர்களுக்குத் தேவையான உதவியை 10 மாதங்களுக்கு முன்பே செய்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் அறிவிப்பபால் நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் பெறும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Modi Helped his friends before 10 months on the currency note issue: Says Mayawathi

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை இக்கட்டான நேரத்தில் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் கையில் எடுத்துள்ளார் என்று கூறினார். இதனால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்து வருவதாக கூறிய அவர், மருத்துவ செலவுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் மக்கள் செத்து மடிவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பணம் இல்லாததால் ஏழைகள் பலர் தங்கள் வீட்டு திருமணங்களை ரத்து செய்துள்ளனர். மாணவர்களால் உரிய நேரத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றும் மாயாவதி கூறினார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நாட்டு மக்களுக்கு திடீரென அறிவித்த மோடி, அதனை 10 மாதங்களுக்கு முன்பே தனது நண்பர்களுக்கு கூறி தேவையான உதவிகளை செய்துவிட்டதாகவும் மாயாவதி சாடியுள்ளார். இதன்மூலம் நாட்டில் உள்ள 90 சதவீத மக்களை மோடி பிச்சைக்காரராக்கி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

English summary
Mayawathi accuses PM Modi that he helped his friends before six months of the Rs.500, 1000 currency notes announcement. Because of Modi's announcement the 90% of people of India has turned as beggars tells mayawathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X