For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி - அந்நாட்டு பிரதமர் எண்டா கென்னியுடன் இன்று சந்திப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்கா மற்றும் அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அயர்லாந்து சென்றடைந்துள்ளார்.

அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி அயர்லாந்துக்கு சென்றடைந்தார். இன்று அயர்லாந்தின் டுப்ளின் சென்றடைந்த மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Modi reached ireland today

மோடி அயர்லாந்து பிரதமர் என்டா கென்னியை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். 60 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் அயர்லாந்து செல்வது இதுவே முதன் முறையாகும்.

அங்கு தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை அமெரிக்கா செல்கிறார். இதனையடுத்து 25 ஆம் தேதி ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, 26 ஆம் தேதி பேஸ்புக் தலைமை அலுவலகம் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Prime Minister of India, Narendra Modi, will make a brief visit to Ireland today where he will meet with the Taoiseach and colleagues and with representatives of the 26,000-strong Indian community based here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X